English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Relic
n. திருச்சின்னம், பூசனைக்குரிய நினைவூட்டுப்பொருள், நினைவுச்சின்னம், எச்சமிச்சக் கூறு, வரலாற்றுச் சின்னம், சென்றகாலத்தை நினைவூட்டும் பழம்பொருள்.
Relicss
n. pl. பிணம், இறந்தோர் எச்சமிச்சக் கூறுகள், அழிவுசக்குத் தப்பி மீந்த துண்டுத் துணுக்குகள்.
Relict
n. தப்பிப் பிழைத்திருப்பவர், விதவை, (பெயரடை) தப்பிப் பிழைத்திருக்கிற, (மண்) சூழ்பொருள்கள் அகன்று தனித்து மீந்துள்ள.
Relief
-1 n. சுமைத் துணிவு, நோவு தணிவு, துஸ்ர்த்தீர்ப்பு, கவலை தணிப்பு உபாசாந்தி, இடர்காப்புத, இன்னல் தவிர்ப்புதவி, ஏழ்மைத்துயர் தணிப்புதவி, துணை உதவி, துணைவலியுதவி, ஆள்மாற்றுதவி, இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு, இடைமாற்றுக்கூறு, இடைத்தளர்வுக்கூறு.
Relief
-2 n. புடைப்பியல், நிலப்படதத்தில் மேடுகளைப் படி அளவொத்த மேடுகளாகக் காட்டும் பண்பு, புடைப்பியல் செதுக்கோவியம், புடைப்பியல் வாய்ப்புப் புடைப்பியல் தோற்ற அமைவு, உருவரைத் தௌதவு, தோற்ற முனைப்பு.
Relieve
v. நோவுதணி, துன்பந் துடை, துணையுதவி அளி, துணைப்படை, அனுப்பி உதவு, முற்றுகை தப்ர், பணியில் ஆள் மாற்றி உதவு, சோர்வகற்றும் இடைமாற்றாக உதவு, கலையில் இடைவேறுபாடு காட்டு, செறிவகற்றும் இடைத்தளர்வூட்டு, விடுபாடு செய், பொறுப்பிலிருந்து விடுவி, முனைப்பளி, கெட்டிமைத்தோற்றங் கொடு.
Relieving
a. பணித்துறையில் ஆள்மாற்றாக வருகிற, புதுப்பிணிமாற்று ஆளான, இடைமாற்றான, இடைவேறுபாடு அளிக்கிற, விடுபாடுதருகிற, துணையுதவியாய் வருகிற.
Relievo
n. உருவரைத் தௌதவு, தோற்ற முனைப்பு, புடைப்பியல் வார்ப்பு, புடைப்பியல் பொறிப்பு, புடைப்பியல் வளர்ப்புரு.
Religion
n. சமயம், மதம், சமய அமைப்பு, திருச்சபை, கடவுள் நம்பிக்கை, கடவுளுணர்வு, சமயச்சடங்கு, சமய நிறுவனம், துறவியர் நிலையம், துறவமைப்பு.
Religioner
n. துறவிகள் சங்க உறுப்பினர், சமய ஆர்வலர், சமய ஈடுபாடு மிக்கவர்.
Religionism
n. சமயமீதார்வம், சமயப் பிடிவாதம்.
Religionize
v. மெய்ச்சமய நெறிக்கு மாற்று, சமய ஆர்வம் தோய்வி, சமயவுணர்வூட்டு, சமயம்மீது ஆர்வங் காட்டு.
Religiose
a. சமயப்பற்று தலைக்கேறிய.
Religiosity
n. சமய உணர்வுடைய, சமய மீதார்வக் கோளாறுடைமை.
Religious, n. sing. Pl.
நோன்பி, நோன்பிகள்,சமயவிரதங்கள பின்பற்றுவதாக நேர்வுறுதி கொண்டவர்கள், (பெயரடை) சமய உணர்வில் தோய்ந்துள்ள, சமய மதிப்பார்வம் மிக்க, சமயப் பற்றார்வம் வாய்ந்த, கடவுட்பற்று மிக்க, சமய ஈடுபாடுள்ள, சமயத்துறவோர் சங்கஞ் சார்ந்த, சமயத் தொட்ர்புடைய, சிறிதும் சமய நெறி பிறழாத, மனச்சான்று மீறாப் பண்புடைய.
Reline
v. சட்டை முதலிய வற்றின் உள்வரி மாற்றியமை, புதிய உள்வரித்துணி இணை.
Relinquish
v. கைநெகிழவிடு, விட்டுவிடு, கைதுற, ஒப்புவித்துவிடு.
Relinquishment
n. விட்டுவிடல், கைதுறப்பு, கைவிடுதல்.
Reliquary
n. நினைவுச்சின்னக் கொள்கலம், நினைவுச்சின்னப் பேழை.
Reliquiae
n. pl. எச்சமிச்சங்கள், (மண்) திணைப்பகுதிக்குரிய மாவட மரவடைச்சின்னங்கள் (தாவ) தண்டில் வாடி உலர்ந்த இலைகளின் எச்சமிச்சங்கள்.