English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reject
-1 n. விலக்கிவைக்கபட்டவர், படைத்துறையில் தகுதியற்றவராக ஒதுக்கப்பட்டவர், விலக்கப்பட்டது, வாணிகத்துறையில் தரமில்லாததென்று மலிவிலை விற்பனைக்காக ஒதுக்கி வைக்கப்படும் பொருள்.
Reject
-2 v. தள்ளு, ஏற்கத்தகாதமதென விலக்கு, தள்ளிவை, வேண்டா என்று ஒதுக்கு, துறந்துவிடு, மறுத்துவிடு, வௌதயேற்று, வாந்தி எடு.
Rejectamenta
n. pl. கழிவுப்பொருள்கள், குப்பை, கடலினின்று வௌதயே எறியப்படும் பொருள்கள்.
Rejection
n. மறுத்தொழிப்பு.
Rejoice
v. மகிழ்ச்சியூட்டு, களி மகிழ்வெய்து, மகிழ்ந்து கொண்டாடு, விழாவயர்.
Rejoicfings
n. pl. மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள், விழாக்கள் பண்டிகைகள்.
Rejoin
-1 v. (சட்) வாதியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளி, விடையிறு, உடனுக்குடன் பதிலளி, எதிர்த்துக்கூறு, சுடச்சுட மறுமொழிகூறு, தோழர்களோடு மீண்டுஞ் சேர், படைப்பிரிவில் மீண்டும் இணை.
Re-join
-2 v. மீண்டும் இணை, மீண்டும் ஒன்றுசேர்த்து வை.
Rejoinder
n. எதிருரை, மறுப்பு.
Rejuvenate
v. மீண்டும் இளமையூட்டு, இளமையின் வலிவும் பொலிவும் அளி, திரும்பவும் இளமையுறு.
Rejuvenation
n. இளமை மீட்புப்பெறு, மீண்டும் இள நலம் வாய்க்கப்பெறுதல்.
Rejuvenesce
v. மீண்டும் இள நலம் எய்தப்பெறு, புத்திளமையூட்டு, (உயி) உயிரணுக்கள் வகையில் மீண்டும் புத்துயிருணர்ச்சி நிரப்பு.
Rejuvenescence
n. புத்திளமைப்பேறு.
Re-kindle
v. திரும்பக்கொளுத்து, புதிதாகத்தூண்டு, கிண்டிவிடு.
Re-label
v. மீண்டும் பெயர்ச்சீட்டு ஒட்டு, மறுபெயரீடுசெய்.
Relapse
n. மறுக்களிப்பு, முன்னிலை மறிவு, மறுவீழ்வு, நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைவு, (வினை) தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழு, மீண்டும் நிலை மோசமாகு, பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்கு.
Relate
v. கூறு, விரித்துரை, தொடர்புபடுத்து, தொடர்புநிறுவு, தொடர்புகொண்டதாயிரு, பற்றியழ்யிரு.
Related
a. எடுத்துரைக்கப்பட்ட, உறவுடைய, தொடர்புபடுத்தப்பட்ட, தொடர்பான, தொடர்புடைய.
Relatedness
n. தொடர்புடைமை, உறவுடைமை.
Relater
n. எடுத்துரைப்பவர், நுவல்வோர்.