English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Relish
n. சுவை மணச் சிற்பபு, தனிச்சுவை, அருங்கலவைப் பண்பு, உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை, கவரும் பண்பு, நறுஞ்சுவையூட்டு, உணவுச்சுவை ஆர்வம், உணவு ஈடுபாட்டின்பம், ஆர்வ ஈடபாடு, இன்னல் விருப்பார்வம், (வினை) நறுஞ்சுவை மணமூட்டு, காரசாரமாக்கு, நுகர்ந்து மகிழ், மகிழ்ந்து ஈடுபடு, சுவை நலமுணர்ந்து பார், சுவையுடையதாயிரு, சுவைமணம் நினைவூட்டு, பண்புநலம் நினைவூட்டு, பண்புநயத்தடமுடையதாயிரு, சுவையுணர்வு பகட்டிக்காட்டு, பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Reluctant
a. விருப்பற்ற, ஆர்வமற்ற, அரைகுறை மனத்துடன் தயங்குகிற.
Relume
v. தீ வகையில் மீண்டும் மூட்டு, விளக்கு வகையில் மறுபடியுந் தூண்டு, திரும்பவும் ஔதபெறச்செய்.
Rely
v. நம்பிக்கைவை, பொறுப்புறுதியுடையவராகக் கருது, ஏற்புடையதாகக் கொள், நம்பிக்கைகொண்டு சார்வுறு.
Remain
v. மிஞ்சு, பயன்படுத்தியபின் எஞ்சியிரு, கழித்த பின் மீந்திரு, தொடர்ந்து நீடித்திரு, கைவசமாயிரு, அழியாது நிலைபெற்றிரு, தங்கு, தங்கியிரு, பின்தங்கியிரு, நிலவுறு, நிலைமாறாயிரு, இரு, தொடர்ந்திரு.
Remainder
n. மிச்சம், எஞ்சியுள்ளவற்றின் தொகுதி, எஞ்சியுள்ளவர்களின் தொகுதி, (கண) கழித்த மிச்சம், வகுத்த மீதம், மீப்பு, தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி, (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை, (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.
Remainder-man
n. விருப்ப ஆவணப் பின்விளைவுரிமையாளர்.
Remaindership
n. விருப்ப ஆவணப் பின்விளைவு உரிமை நிலை.
Re-make
v. திரும்பவும் ஆக்கு, மறுபடியும் உருவாக்கு.
Reman
v. புதிய ஆள் அமர்த்தி இணை, மீட்டும் மனிதத் தன்மைக்குக் கொண்டுவா, மறுபடியும் வீரம் ஊட்டு.
Remand
n. காவல் வைப்பு, (வினை) மறுபடியும் அனுப்பு, மறுபடியும் காவலின் ஒப்படை, புதிய சான்றுகள் திரட்டி விசாரணை செய்வதற்காக மீண்டும் காவலுக்கு அனுப்பு.
Remanent
a. மீந்துள்ள, எஞ்சியுள்ள.
Remanet
n. மீதியுள்ள பகுதி, எச்சம், தள்ளிவைக்கப்பெற்ற வழக்கு, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றச் சட்ட மூலம்.
Remarable
a. குறிப்பிடத்தக்க, கவனித்தற்குரிய, தனிச்சிற்பபிற்குரிய.
Remargin
v. புதிய ஓரங்கட்டு.
Remark
n. குறிப்புரை, கருத்துக்குறிப்பு, குறிப்பீடு, எழுத்துவடிவக் குறிப்பு, எழுத்துவடிவக் கருத்துக்குறிப்பு, குற்றங்குறை எடுத்துரைப்பு, கவனிப்பு, கருத்திற் கொள்ளுதல், கூற்று, குறிப்புவாசகம்,(வினை) கருத்திற்கொள், குறிப்பிடு, கவனித்துப்பார்., கருத்துரை கூறு, கருத்து எடுத்துரை, குணங் குற்றங்கள் எடுத்துரை, கருத்து விளக்கங்கூறு.
Remarque
n. அடையாளம், செதுக்கோவியத் தட்டின் பழைமை குறிக்க ஓரத்தில் எழுதப்பெறும் ஓவியக் குறிப்பு.
Remblai
n. கோட்டை கொத்தளப் பிடிசுவர்கள் முதலிய அமைக்கப் பயன்படும் மண், இருப்புப்பாதை, மேடுகளை அமைக்கப் பயன்படும் மண், சுரங்கத்தில் ஒதுக்கிச் சேமிக்கப்பட்ட மண்.
Rembrandtesque
n. ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு, முனைப்பான ஔதநிழல் வண்ண ஓவியப் பாணி, (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள.
Remediable
a. சீர்ப்படுத்தக்கூடிய, தீர்வுகாணத்தக்க, பரிகரிக்கத்தக்க.