English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Remit
v. மன்னித்தல் செய், பொறு, கடன் வகையில் வலிந்து வாங்குவதைத் தவிர், தண்டனைள வகையில் விதிக்காமலிரு, நிறைவேற்றாமலிரு, குறைந்துபோ, குறையச்செய், தளர்ந்து, இளக்கு, தணியச் செய், செய்யாமலிரு, தவிர், நின்றுபோ, தீர்ப்புக்காக அதிகாதிக்கு அனுப்பு, வழக்கு வகையில் கீழ்நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு, முந்திய நிலைக்குப் போகச் செய், தள்ளிவை, தாமதப்படுத்து, பணம் அனுப்பு, தொதகை செலுத்து, அஞ்சல் மூலமாக அனுப்பு.
Remittal
n. தண்டனைக்குறைப்பு, வழக்குமாற்றீடு, மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்கினை அனுப்புதல்.
Remittance
n. பண அனுப்பீடு, அனுப்பிய தொகை, அனுப்பிய பொருள்.
Remittance-man
n. தாயகத் தொலை ஆதரவுவாணர், வேற்று நாட்டில் குடியேறித் தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தைக் கொண்டு வாழ்பவர், வௌதநாடுகளிலிருப்பதற்குப் பணம் கொடுக்கப்பெறுவர்.
Remittee
n. பணம் அனுப்பபெறுபவர்.
Remittent
n. இடைத்தளர் சுரம், இடையிடையே தணிந்து வரும் காய்ச்சல் வகை, (பெயரடை) காய்ச்சல் வகையில் இடையிடையே தணிந்து வருகிற.
Remitter
-2 n. வழக்குமாற்றீடு, மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல், (சட்) வல்லுரிமை மாற்றீடு, உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல்.
Remitter(1), n.,
தொலைவிடத்துக்குப் பணம் அனுப்புபவர்.
Remnant
n. கழிவு, எச்சமிச்சம், எஞ்சியுள்ள சிலர், கிழிவுத்துண்டிப்பு.
Remodel
v. புதிய மாதிரியில் அமை, புத்துருக்கொடு, புதுப்பித்துக் கட்டு.
Remonetize
v. உலோக மதிப்பு அளித்து முன்கேபாலச் செலாவணி நாணயமாக்கு.
Remonstrance
n. எதிர்வாத விளக்கம், தடுப்புரைவாதம்,கண்டனம், குறை முறையீடு, பொது முறையீடு, செவியறிவுறுஉ.
Remonstrant
n. வன்மையாக மறுப்பவர், இடித்துரைப்பவர், (பெயரடை)வன்மையாகக் கண்டிக்கிற.
Remonstrate
v. மறுப்புக்கூறு, செவியுறை கூறு.
Remonstrative
a. மறுத்து விளக்கிக்கூறுகிற.
Remontant
n. பன்முறை மலருஞ் செடிவகை, ரோசா (பெயரடை) பன்முறை மலர்கிற.
Remora
n. கப்பலொட்டி மீன், தட்ங்கல், இடையூறு.
Remorse
n. கடுங்கழிவிரக்கம், உளநைவு, அகச்சான்றின் உறுத்தல்.
Remorseful,a.
சென்றதற்கு இணைகிற, நனி இரங்கும் இயல்புடைய.
Remorseless
a. இரக்கமில்லாத, கொடிய.