English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Remote
a. நெடுந்தொலைவில் உள்ள, மிகச் சேய்மையான இடத்திலுள்ள, நெடுங்காலதர்திற்கு முந்திய, நெருங்கிய உறவல்லாத, பெரிதும் வேறுபட்ட, இயல்பிலேயே வேறான, நீளிடை விலகிய, தொலைக்காடியான, ஒதுக்கமாயுள்ள, மிகச்சிறிய, நொய்ய.
Remount
-1 n. புதுக்குதிரை, (வினை) புதிய குதிரை வாய்ப்புக் கொடு.
Remount
-2 v. மீண்டும் மேலே போ, மீண்டும் மேலே ஏறு, மூலகத்துக்கே திரும்பிச் செல், குறிப்பிட்ட சமயத்துக்கே திரும்பச்செல்.
Removable
n. அயர்லாந்தில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க குற்றநடுவர், (பெயரடை) எடுத்துவிடக்கூடிய, தள்ளிவிடத்தக்க, குற்றநடுவர், அலுவலர் வகையில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க, மன்னர் அல்லது மேலதரிகாரி விரும்புகிற காலம் வரையில் பதவிதாங்குகிற.
Removal
n. நீக்கிவிடுதல், இடம் பெயர்ப்பு, எடுத்துச் செல்லுதல், இடமாற்றம், விலகல், இருப்பிட மாற்றம், கொலை, கொன்றழிப்பு.
Remove
n. நுண்படி, படித்தரம், சிறகட்ட அளவு, சிறுதொலை, பள்ளிப்படிவ உயர்வு, மேற்படிவத்தேறுதல், உணவு மேடையில் மறு உணவுத்தட்டம், (வினை) நீக்கு, விலக்கு, பெயர்த்து அகற்றிவை, வேறிடத்துக்கு மாற்று, பதவிமாற்று, பதவி நீக்கு, விலகுவி, அகற்றிக்கொண்டு செல், இடமாற்று, அகல், அப்ன்று செல், விலகிச்செல், விலகிச்செல், உணவுத்தட்டம் மாற்றிவை, உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி, நிலைமாற்று, ஒழித்துக்கட்டு, பதவியிலிருந்து நீக்கிவிடு, மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
Removed
a. சேய்மையான, உறவுமுறை வகையில் படித்தரத்தில் விலகியுள்ள.
Remover
n. அகற்றபவர், எடுத்துச்செல்வது, சாமான்களை ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குக் கொண்டுசெல்பவர்.
Remunerate
v. உழைப்பூதியங்கொடு, பரிசளி, கைம்மாறாகு, உழைப்பு வகையில் ஈடுசெய், உழைப்பவர் வகையில் உழைப்பீடு ஔத.
Remuneration
n. கைம்மாறு, பரிசு, சன்மானம், ஊதியம்.
Remunerative
a. ஆதாயமான, பயன்தருகிற.
Renaissance
n. புத்துயிர்ப்பு, (வர) 14-16-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி, மறுமலர்ச்சிக்காலம், மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி, (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த, மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய.
Renal
a. குண்டிக்காய்கள் சார்ந்த.
Renascence
n. புத்துயிர்ப்பு, புதுப்பிப்பு, கலை-இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம்.
Renascent
a. புத்துயிர் பெறுகிற, புதுவலிவு பெறுகிற.
Rend
v. கிழி, திருகிப்பறி, இரண்டாகப் பிள, துண்டு துண்டாகப் பிரி.
Render
n. குடிவாரம், பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம், (வினை) விட்டுக்கொடு, திருப்பிக்கொடு, ஈடாக அளி, சரிசெய், ஒப்புவி, ஒப்படை, பணிந்துகொடு, முன்வை, முன்னிலைப்படுத்து, வழங்கு, செய், ஆக்கு, ஆக்கியமை, காட்டு, உருப்படுத்திக்காட்டு, கலையுருப்படுத்திக்காட்டு, மொழிபெயர், சொற்பெயர், உருப்பெயர், மற்றயமை, கடனாற்று, ஆற்றியுதவு, ஆற்று, நடைமுறைப்படுத்து, உருக்கு, உருக்கிவடி, தௌதவாக வடித்தறு, கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.