English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rococ
n. மிகு ஒப்பனைக் கலைப்பாணி, மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி, (பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த, மனைப்பொருள்கள்,-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த, மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற, இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த, பழமைப்பட்ட, காலங்கடந்த.
Rod
n. கழி, கோல், மாத்திரைக்கோல், செங்கோல், அதிகாரச்சின்னம்,, சாட்டை, அடிக்குங் கோல், பிரம்புக்கட்டு, தண்டனைச் சின்னம், பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு, தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு, உலோகக் கம்பி, இணைப்புக்கோல், இணைப்புத்தண்டு, இயந்திர நீளுருளை, அளவுகோல், 11 முழ நீளம், நில அளவை அலகு, 121 சதுர முழப்பரப்பலகு, செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு, 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
Rode
-1 v. காட்டுக்கோழி வகையில் மாலைநேரத்தில் நிலம்நோக்கிப் பறந்து வா, கானாங்கோழி வகையில் இனப்பெருக்கப் பருவத்தில் மாலைநேரத்திற் பறந்துசெல்.
Rode
-2 v. 'ரைட்' என்பதன் இறந்தகாலம்.
Rodent
n. கொறி விலங்கு, (பெயரடை) கொறிக்கிற, கொறிவிலங்கினஞ் சார்ந்த.
Rodeo
n. கால்நடை வளைப்பிடம், சூடிடப்படுவதற்காகக் கால்நடைகள் வளைந்து வைக்கப்படுமிடம், கால்நடை வளைப்பு, மாடோ ட்டியின் வளைப்புத்திறம், மிதி உந்து வாணரின் கரணவேடிக்கை.
Rodk-cork
n. கல்நார் வகை.
Rodking-stone
n. அசைந்தாடும் சமநிலைக் குண்டுக்கல்.
Rodomontade
n. வீம்புப் பேச்சு, வீறாப்புரை, (பெயரடை) வீம்பு பேசுகிற, பெருமையடித்துக்கொள்ளுகிற, (வினை) வீறாப்பு பேசு, பெருமையடித்துக்கொள், வீமபடித்துக்கொள்.
Rodomontader
n. வீம்புரையாளர், வீறாப்புக்காரர்.
Roe
-1 n. சிறுமான் வகை, செந்நிற மானின் பிணா, சிறு மான் குழு, சிறுமான்கள்.
Roe
-2 n. மீன்சினைப்பு, மீன்முட்டைத் தொகுதி, ஆண் மீனின் விதை, ஆண் மீனின் கருநீர்.
Roebuck
n. இரலை, சிறு மான் கலை.
Roe-corn
n. மீன்சினை, மீனின் தனிமுட்டை.
Roe-deer
n. சிறு மான்பிணை.
Roe-stone
n. முட்டைக்கல், சுண்ணமணிக்கல்.
Rogation
n. வேண்டுகோள், பிரார்த்தனை, (வர) பண்டை ரோமாபுரி அதிகாரிகள் மக்கள் முன் கொணருஞ் சட்டம்.
Rogations
n. pl. முந்நாட் பாசுரங்கள், இயேசுநாதரின் வான் செலவு விழா நாளுக்கு முந்தியுள்ள மூன்று நாள்களில் பாராயணஞ் செய்யப்படும் வழிபாட்டுப் பாசுரங்கள்.