English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Salient
n. புறப்புடைப்புப் பகுதி, கோட்டையின் முகப்பு, அரண் வரிசையின் உந்துநிலைக்கூறு, கோட்டையின் புற முனைப்புக்கோணம், (பெ.) புறமுனைப்பான, உந்தி நிற்கிற, புறப்புடைப்பான, முனைப்பிதுக்கமான, பார்வையான, சிறப்பான, முனைப்பாகத் தெரியவருகிற, முக்கியமான, துள்ளுகின்ற, குதிக்கின்ற, (செய்.) நீர்வகையில் குமுறி எழுகின்ற, துளும்புகின்ற, (மரு.) குருத்து நிலையான, தொடக்க முனை நிலையான.
Saliently
adv. முனைப்பாக, தௌதவாக, முதனிலையாக.
Saliferous
a. (மண்.) உப்பார்ந்த, உப்பார்ந்த அடுக்குகளுக்குரிய.
Saline
n. உப்பேரி, உப்பளம், உப்புத்தொழிற்சாலை, உப்படங்கிய பொருள், பேதிமருந்துப்பு, உப்புநீர், (பெ.) உப்பார்ந்த, உப்புக்கள் கலந்த, உப்பியல்புடைய, வேதியியல் வகையில் கார இயல்புடை உலோகங்கள்-வௌதமம் ஆகியவற்றின் காரங்களையுடைய.
Salinity
n. உப்புத்தன்மை, உப்புச்சுவையுடைமை.
Salinometer
n. நீர்ம உப்பியல்புமானி.
Saliva
n. வாயூறல், உமிழ்நீர், எச்சில்.
Salivate
v. வழக்கத்திற்கு மிகையாக உமிழ்நீர் ஊறச்செய், பாதரசத்தின் துணையால், பெரிதளவில் வாயூறல் உண்டுபண்ணு, அளவிற்கு மிஞ்சி எச்சில் ஊறப்பெறு.
Salle-a-manger
n. விருந்துக்கூடம், சிற்றுண்டி அறை.
Salle-dattente
n. ஊர்திநிலையத் தங்கிலடம்.
Sallenders
n. pl. குதிரைப் பின்கால் மூட்டு வெம்புஐ.
Sallow
-1 n. குறுமர வகை, குறுமர வகையின் வளைவு நொசிவுடைய சுள்ளிக்கட்டை.
Sallow
-2 a. மனித உடலின் மேல்தோற்றம் வகையில் வௌதறிய பழுப்புநிறம் வாய்க்க, (வினை.) வௌதறிய பழுப்புநிற மூட்டு.
Sallowy
a. குறுமரவகை செறிந்த.
Sally
-2 n. புடையெழுச்சி, மணிடிக்கத் தொடங்கும்போது உண்டாகும் முதல் அசைவு, கடைநிலை, மணியடித்து முடிந்த போது ஏற்படும் நிலை, மணியடிக்கும் கயிற்றின் கம்பிளி உள்வரியிட்ட கைப்பிடி.
Sally
-3 n. சூடான அப்பவகை.
Sally-hole
n. மணிக்கயிற்றுப் புழை, மணியடிக்குங் கயிறு சுவர்வழி செல்லும் புழை வழி.
Sally-port
n. புடைவாயில், திட்டிவாயில்.
Salmagundi
n. கதம்ப உணவு, இன்கலவைத் கறிக்கொத்து மீன்-முட்டை-வெங்காயம் முதலியன கலந்து சுவைமண மூட்டப்பட்ட இறைச்சியுணவு, சில்லறைத் திரட்டு, பண்புக் கலவை.