English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shoreman
n. கரைவாணன், கரையில் வாழ்பவர், நிலவாழ்வினர், மீன் தொழிலில் கரைமேற் செல்பவர்.
Shoreside
n. கரைப்பக்க இடம், (பெ.) கரையின் பக்கமுள்ள, (வினையடை.) கரையின் பக்கத்தில்.
Shoresmen
n. pl. மீன் தொழிலில் கரைமேற் செல்பவர்கள்.
Shoreward
a. கரை நோக்கிய, கரையை நாடிய, (வினையடை.) கரைநோக்கி, கரையை நாடி, கரையின் திசையில்.
Shorewards
adv. கரைநோக்கி.
Shoring
n. உதைவரிக்காலிட்டுத் தாங்குதல்.
Shor-room
n. காட்சிக்கூடம், சரக்குகளின் பகட்டானபொதுப் பார்வைக்குரிய அறை.
Short
n. சுருக்கம், குறுக்கம், சுருங்கிய அளவு, மணிச்செறிவு, குறில், குற்றுயிரொலி, குற்றசை, குறிற் குறி, குற்றுயிரொலி அடையாளம், (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு, (பெ.) குறுகிய, நீளங் குறைந்த, குட்டையான, உயரங் குறைந்த, குள்ளமான, குறுகலான, இடங்குறுகிய, குறைந்த இடர்பரப்புடைய, காலங்குறுகிய, தொலை விளைவற்ற, உடனடி விளைவுடைய, குறுகிய கால எல்லையுடைய, சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய, அணித்தான, சிறிதுகாலமே பிடிக்கிற, விரைவில் செய்து முடிக்கத்தக்க, சுருங்கிய, குறைந்த அளவான, விரிவற்ற, சுருக்கமான, மணிச்செறிவான, ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய, பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய, வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட, சிறுதிறம் வாய்ந்த, தாமதமற்ற, சோர்வு தட்டாத, இயல்பான எல்லையிற் குறைந்த, எதிர்பார்த்ததில் குறைந்த, நேரான, சில சொல்லே சொல்லுகிற, சுற்றிவளைக்காத, வெடுக்கென்ற, நறுக்கென்ற, சுருக்கென்ற, வெட்டொன்று துண்டிரண்டான, எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய, பொடிந்துவிடுகிற, உறுதியற்ற, மின்குறுக்குவெட்டான, மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான, எழுத்தொலி வகையில் குறிலான, மாத்திரையிற்குறைந்த, (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத, பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட, வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற, (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு, (வினையடை.) சட்டென, திடுமென, சுருக்காக, எதிர்பாராமல், எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே, மொட்டையாக, சிறிதும் தும்புவிடாமல், அருகேயுள்ள பக்கத்தில், இடையிட்டு.
Shortage
n. குறைபாடு, குறைவு, பற்றாக்குறை, குறைந்திருக்கும் அளவு.
Shortbread, shortcake
உதிர் அப்ப வகை.
Short-circuit
v. (மின்.) குறுக்கு வெட்டாகப் பாய்வுறு, குறுக்குவெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நிற்கப்பெறு, அறுவைமருத்துவ வகையில் நடுவில் நேர்வழி தடைப்பட்ட போது குறுக்குவெட்டாக இடைத்தொடர்பு ஏற்படுத்து, சுருக்குவழி ஏற்படுத்திக்கொடு, சுற்றுவழி தவிர்.
Short-coat
v. வயதான குழந்தை வகையில் சற்றே இறுக்கமான உரப்புகள் அணிவி.
Shortcoming
n. குறைபாடு, வழு, இழுக்கு, குற்றம், கடமையிற் பிழை.
Shortdated
a. குறுங்காலமான, குறித்துள்ள தேதியிலிருந்து சிறிது காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகிற.
Shorten
v. சுருக்கு, குறுக்கு, நுனி நறுக்கு, வெட்டிக்குறை, குறுகு, சுருங்கு, மரக்கல வகையில் பாய்பரப்பின் அளவைச் சுருக்கு, குழந்தைக்கு இறுக்கமான உடுப்பு அணிவி.
Shortening
n. வெட்டிக் குறைப்பு, சுருக்கம், விரைவாக்கம், காலச் சுருக்கம், மாப்பண்ணிய வகையில் மொறுமொறுப்பாய் இரப்பதற்குச் சேர்க்கப்படுங் கொழுப்பு.
Shortfall
n. துண்டுவிழுதல், துண்டாந்தொகை.
Shorthand
n. சுருக்கெழுத்து, கண்ணெழுத்துமுறை.
Shorthanded
a. வேலையாள்கள் போதாத, தொழிலாளர் குறைவாயுள்ள, குட்டைக் கைகளையுடைய.
Short-head
v. குதிரைப் பந்தயத்தில் குதிரைத் தலை நீளத்தை விடக் குறைவான தொலைவுக் குறைபாட்டினால் தோல்வியுறுவி.