English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Should
v. 'சல்' என்பதன் இறந்தகாலம்.
Shoulder
n. தோள், பறவையின் இறகடிப்பகுதி, தோள்மூட்டு, தோட்பட்டை, விலங்கின் தோட்பட்டை இறைச்சி, மலையின் முகட்டடிப்பகுதி, புட்டியின் தலைப்படிப் பகுதி, கருவியின் தலையடிப்பகுதி, சுமைதாங்கும் உறுப்பு, பொறுக்கும்பகுதி, (படை.) துப்பாக்கியைத் தோளில் சுமந்த போர் வீரர்நிலை, (வினை.) தோளினால் இடித்துத்தள்ளு, நெருக்குத்தள்ளு, முட்டிமோது, தோளினால் இடித்ததுத்தள்ளி, வழியுண்டாக்கிக்கொண்டு செல், சுமையைத் தோள்மேல் எற்றிக்கொள், பொறுப்பேற்றுக்கொள்.
Shoulder-belt
n. வல்லவாட்டு, குறுக்குத் தோள்பட்டி, தோள்மீதிருந்து எதிர்ப்புற விலாவடியாகச் சுற்றியிடும் பட்டைக் கச்சை.
Shoulder-blade
n. தோட்பட்டை எலும்பு.
Shoulder-brace
n. கூன்முதுகை நிமிர்த்தற்கான அமைவு.
Shouldered
a. தோள்களை உடைய.
Shoulder-joint
n. தோள்மூட்டு.
Shoulder-knot
n. தோள் அணி ஒப்பனைப்பட்டிகை.
Shoulder-pegged
a. குதிரை வகையில் தோட்பட்டையருகே விறைப்புடைய, தோளசைக்க முடியாத.
Shoulders
n. pl. முதுகுப்பட்டை, முதுகின் மேற்பாகம், பாரந்தாங்கும் பகுதி.
Shoulder-strap
n. தோள் வார்ப்பட்டை, உடுப்பின் தோள்தொங்கல் வார்களில் ஒன்று, படைவீரரின் இடுப்புடைதாங்கும் தோள்வார்.
Shout
n. கூச்சல், மகிழ்ச்சி, ஆர்ப்பரிப்பு, உடன்பாட்டு ஆரவாரம், எதிர்ப்புக் கூப்பாடு, மறுப்புக் கூக்குரல், கவனத்தை ஈர்க்கும் கூவிளி, உரத்த பேச்ச, (வினை.) ஆர்ப்பரி, கூச்சலிடு, கூப்பாடுபோடு, உரக்கப்பேசு, உரக்கச்சொல், உரத்தகுரலில் தெரிவி, கூப்பிடு, கூவி அழை, (இழி.) தேறலகத்தில் எல்லாருக்குமாக மதுவழங்க ஆணையிடு.
Shove
n. தள்ளுகை, அகக்காழ்வரி, சணல்தண்டின் நடுக்காழ்ப்பகுதி, (வினை.) தள்ளு, நெருக்கு, தள்ளிக்கொண்டு போ, உந்தி இயக்கு, உந்து, துருத்து, நெருக்கியடித்துக்கொண்டுசெல், இடித்துத் தள்ளிக் கொண்டு செல், தள்ளிவிடு, நகர்த்து, நகர்த்தி வை, ஒதுக்கி வை.
Shove-halfpenny
n. கப்பல் தாயக்கட்ட ஆட்டம்.
Shovel
n. மண்வாரி, பார்வாரி, வாருபடை, சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி, (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு, பார்வாரியால் வாரு, வாரியிடு, அள்ளிக்கொட்டு.
Shovel board
n. கப்பல் தாயக்கட்ட ஆட்டம்.
Shovel ful
n. வாருபடை அளவு.
Shovel-hat
n. அகல்விளிம்புத் தொப்பி.
Shovel-head
n. சுறாமீன் வகை, ஐவரித்தோட்டு மீன்வகை.
Shoveller
n. வாரிக்கொட்டுபவர், அகல் அலகு வாத்து வகை.