English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shred
n. கந்தைக்கீற்று, துண்டு, துணுக்கு, கிழிசல், உடைசல், எச்சமிச்சங்கள், மிகச் சிற்றளவு, (வினை.) துண்டு துண்டாகச் சிதறடி, கந்தல் கந்தலாகக் கிழி.
Shrew
n. ஆண்மாரி, அடங்காப்பிடாரி, மூஞ்சூறு.
Shrewd
a. ஆய்திறமிக்க, எஃகு நுட்பமுடைய, கூர்மதிவாய்ந்த, நுண்புலமிக்க, தேரறிவு வாய்ந்த, வகை திரிபுணர்வுடைய, நுண்ணுணவுர்த் தோற்றமுடைய, உறைப்பான, நோய் வகையில் உறுத்தலான, கடுத்த, குளிர் வகையில் கடிப்புமிக்க.
Shrewish
a. தூற்றும் பெண்டிரின் இயல்பு வாய்ந்த, ஆண்மாரியான, அடங்காப்பிடாரியான, எரிந்துவிழுகிற.
Shriek
n. கிறீச்செணல், வீறிடுதல், நோவுகாரணமான அலறல், அச்சங் காரணமான கதறல், உரத்த கூச்சல் ஒலி, (வினை.) கிறீச்சிடு, வீறிடு, அலறு, கதறு, பேய்ச் சிரிப்புச் சிரி, அடக்கமுடியாமல் சிரி.
Shrievalty
n. மாவட்ட மணியப் பதவு, மாவட்ட மணிய ஆட்சியெல்லை, மாவட்ட மணியப் பதவிக்காலம், மாநகர் மணியப் பதவிக்காலம், அமைதிகாவலர் ஆட்சியெல்லை, அமைதிகாவலர் பதவிக்காலம், தேர்தல் முகவர் பதவி.
Shrift
n. இரங்குவினை, சமய குருமாரிடம் பழிபாவங்களை வௌதயிட்டுரைக்கை, குறையேற்பிற்குப் பின்னான பாவமன்னிப்பு.
Shrill
a. கீச்சிடுகிற, ஒலி வகையில் காதைத் துளைக்கிற, குரல்வகையில் கூரிய, மன்றாடித் தொந்தரை செய்கிற, பிடிவாதமாக வற்புறுத்துகிற, (வினை.) (செய்.) கீச்சொலியிடு, வற்புறுத்திக் கெஞ்சி முறையீட செய், கீச்சொலியுடன் பாடு.
Shrimp
n. கூனிறால், குள்ளன், (வினை.) இறால்மீன் பிடிக்கச்செல்.
Shrine
n. கோயில், புனிதப்பேழை, வண்ணக்கல்லறை, திருவிடம், தனிச்சிறப்புடைய புண்ணியத்தலம், தனிச்சிறப்புத்தொழுயடம், புனித நினைவுச்சின்னம் உள்ள இடம், (வினை.) திருச்சின்னமாக உட்கொண்டிரு, கோயில்கொள்ளு, போற்றிவைத்துப்பேணு.
Shrink
n. சிறுக்கம், சுரிப்பு, திகைப்பு, (வினை.) சிறுகு, குறுகு, சுருங்கு, சுரிப்புறு, சிறிதாய்விடு, திரைவுறு, கம்பளி முதலியன சுருங்குவி, உள்ளுக்கிழு, கூசு, கூச்சங்கொள், பின்னிடு, வெறுப்பினால் பின்வாங்கு, அச்சத்தினால் பின்னிடைவுறு, வெறுத்தொதுங்கி விலகு, அஞ்சி விலகு, தவிரும்படி விட்டுவிலகு, வெறுப்புக் கொள்.
Shrinkage
n. அளவுக்குறுக்கம், சுருக்குறல், சுரிப்பு, சுருங்குமளவு.
Shrive
v. குறை ஏற்பினைக் கேட்டுப் பழிபாவங்களினின்றும் விடுவி, நோன்பு வகுத்துக்கொடுத்துப் பழிபாவங்களினின்றும் விடுவி, செய்ததற்கு இரங்குபவர் வகையில் பழிபாவங்களை ஒப்புக்கொண்டு விடுவிக்கப்பெறுதற்காகச் சமயகுருவினிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்.
Shrived
v. 'சிரிவ்' என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று, 'சிரிவ்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Shrivel
v. திரைவுறுத்து, திரைவுறு, மடிப்பிட்டுச் சுருக்கு, மடிப்புற்றுச் சுருக்கு, கசக்கிச் சுருள்வி, கசங்கிச் சுருள்வுறு, வற்றிச் சுரிப்புறு, சருகாக்கு, சருகாகு, வாடிவதங்குவி, வடிவதங்கு.
Shriven
n. 'சிரிவ்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Shroff
n. வட்டிக்கடைக்காரர், நாணய நோட்டநிபுணர், (வினை.) நாணயத்தைக் கூர்ந்தாராய், நாணய நோட்டம்பார்.
Shroud
n. பிண முக்காடு, சவப்போர்வை, மறை மூடாக்கு, மறைத்து வைக்கப்பட்ட நிலை, தெரியாநிலை, (வினை.) பிணத்தைப் போர்வையிட்டு மூடு, மூடிமறை, உருத்தெரியாமல் மூடு.
Shroudless
a. பிண வகையில் மூடாக்கற்ற.