English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sanhedrim
n. யூதரின் மீயுயர்மன்றம், பண்டைய எருசலேமில் ஹ்1 பேர் கொண்ட மீயுயர் நீதிமன்றமம் மீயுயர் ஆயமுமாய் அமைந்த சபை.
Sanicle,
குடைவடிவக் கொத்துமலர்ச்செடிவகை.
Sanify
v. உடல்நலமுறச் செய், நலமுறுவி, இடவகையில் உடல்நலத்திற்கு உகந்ததாக்கு.
Sanitarian
n. உடல்நல ஏற்பாடுகளைப் பயில்பவர், உடல்நல ஏற்பாடுகள் செய்வதற்கு ஆதரவானவர், (பெ.) உடல்நல ஏற்பாடுகள் சார்ந்த, உடல்நல ஏற்பாட்டுப் பயிற்சி மேற்கொண்ட.
Sanitarist
n. உடல்நல ஏற்பாடுகளில் அக்கறையுடையவர், ஆரோக்கிய வசதிகளில் பயிற்சியுடையவர்.
Sanitary
a. உடல்நலத்திற்குகந்த, ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட, உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய, ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய, சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய.
Sanitary wears
தூய்மைக்காப்பு, துப்புரவுப் பொருட்கள்
Sanitate
v. உடல்நலத்திற்கு உகந்ததாக்கு, ஆரோக்கியச் சூழ்நிலைகள் அமைவி, உடல்நலத்திற்கு வேண்டிய துணையமைவுகள் இணைவி.
Sanitation
n. உடல்நலநிலை ஆக்க மேம்பாடு, ஆரோக்கிய வளர்ச்சி ஏற்பாடு, சுகாதாரம், சாக்கடை கழிவுநீக்க ஏற்பாடுகள்.
Sanity
n. நல்லறிவு நிலை, மனநலம், மூளைக்கோளாறற்றநில, தீவிரக் கருத்துக்களைத் தவிர்க்கும் போக்கு.
Sanjak
n. துருக்கியில் நாட்டாட்சிப்பகுதி, வட்டம்.
Sank
v. சிங்க் என்பதன் இறந்தகாலம்.
Sannnyasi, sanyasi
துறவி.
Sans ceremonie
adv. சடங்குமரபீன்றி, வினைமுறைகளை அவசரமாகத் தவிர்த்து.
Sans facon
adv. வௌதப்படையாக, வக்கணை இல்லாமல்.
Sans phrase
adv. ஒரே சொல்லில், வளர்த்தாமல்.
Sansculotte
n. கீழ்நிலை வகுப்பைச் சார்ந்த, பிரஞ்சுப்புரட்சியாளர், தீவிரக் குடியரசுக்கொள்கையாளர், தீவிரப்புரட்சியாளர்.
Sansculottere
n. தீவிரக் குடியரசுக் கொள்கைப் பாங்கு, தீவிரப் புரட்சிப்பான்மை.
Sansculottic
a. தீவிரக் குடியரசுக்கொள்கை சார்ந்த, தீவிரப் புரட்சிப்பாங்குடைய.