English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sorority
n. தங்கை தமக்கை முறை, கல்லுரி மகளிர் சங்கம்.
Sorosis
n. (தாவ.) தசைப்பற்றுடைய பல்சுளைக் கூட்டுக்கனி.
Sorra
adv. அயர்லாந்து வழக்கில் அல்ல, அல்லவேயல்ல.
Sorrel
-1 n. கார இலைக் களைப்பூண்டு வகை.
Sorrel
-2 n. செந்தவிட்டுநிறம், இரலை, மூன்றாட்டை மான்கலை, (பெ.) செம்பழுப்புநிறமான, செந்தவிட்டு வண்ணமான.
Sorrily
adv. வருந்தத்தக்க முறையில், மோசமாக.
Sorrow
n. மனத்துயரம், கவலை, வருத்தம், கழிவிரக்கம், பின்வருந்துநிலை, துக்கம், இழப்பு வருத்தம், இன்னா நிகழ்ச்சி, இடும்பை, துயர்க்க கொண்டாட்டம், புலம்பல் அழுதரற்றல், (வினை.) துயருறு, வருந்து, இழப்புக்கிரங்கு, இழவு கொண்டாடு, எண்ணிப் புலம்பு.
Sorrower
n. துயருறுவோர், வருந்துவோர்.
Sorrowful
a. துயரமான, வருந்திய தோற்றமுடைய, கவலையான.
Sorrowfully
adv. கவலையுடன், வருத்தத்துடன், துயரத்துடன்.
Sorrowfulness
n. துயரமுடைமை, வருத்தமுடைமை, கலையுடைமை.
Sorrowing
n. அழுகை, துயரிலாழ்வு, துக்கம், இழப்புக்கொண்டாட்டம், (பெ.) துயருறுகின்ற, பிரிவிற்கு வருந்துகின்ற, இழப்பிரங்குகின்ற.
Sorrow-stricken
a. துன்பத்தால் அலைவுற்ற.
Sorry
a. வருத்தப்படுகிற, கழிவிரக்கங் கொள்ளுகிற, வருத்தங் கொள்ளுகிற, சிறு தவறுக்கு வருந்துகிற, துன்பந்தருகிற, இரங்கத்தக்க, வருந்தத்தக்க, அவலத் தோற்றமுடைய, இலக்கிய வகையில் இழிந்த, தகுதியற்ற, ஆபாசமான, வருத்தந் தெரிவிப்புக் குறிப்பு.
Sort
n. வகை, மாதிரி, ஒத்த குழு, கும்பு, வகுப்பு, ஒத்த பண்புடைய குழு, படித்தரம், ஒருமாதிரி, வகைமாதிரி, போலிமாதிரி, வழி, விதம், (அச்சு.) தனி எழுத்துருத்தொகுதி, (வினை.) வகைப்படுத்து, வகைப்படுத்திப் பிரி, வகைவேறுபடுத்து, வகை ஒழுங்கபடுத்து, வகுத்துத் தேர்ந்தெடு, இணக்குவி, திருத்து, விதையடி, (பே-வ) ஒருகை பார்த்துவிடு.
Sortable
a. வகைப்படுத்தக் கூடிய, வகைபிரித்துத் தேரக்கூடிய, பலவகைகளை உட்கொண்ட.
Sorter
n. வகைப்படுத்த வல்லவர், வகைப்படுத்துபவர், அஞ்சல் நிலையக் கடித வகை பிரிப்பாளர்.
Sortes
n. pl. ஏட்டுத் திருவுளக் குறிப்பறிதல், திருக்குறிப்புச் சாத்து.
Sortie
n. உழிஞைத்தாக்கு, முற்றுகைப்பட்ட வீரரின் அரண்புறப்பாய்வுத்தாக்குதல்.
Sortilege
n. திருவுளச்சீட்டுத் திருக்குறிப்பறிவு.