English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sortition
n. திருவுளச் சீட்டுக் குலுக்கல்.
Sorus
n. (தாவ.) குவியல், கொத்து, சூரல், சிதலுறைக்கொத்து.
So-so
a. சுமாரான, நல்லதும் கெட்டதும் அல்லாத, (வினையடை.) சுமாராக.
Sostenuto
adv. (இசை.) தொடர்ந்து நீடித்தமுறையில்.
Sot
n. களிமகன், (வினை.) வெறி மயக்குறு.
Sothebys
n. லண்டன் கையெழுத்துப்படி அச்சுப்படிப்புத்தக விற்பனைக்கூடம்.
Sothic
a. எரிமீனுக்குரிய, அக்கினி நட்சத்திரம் சார்ந்த, எரிமீன் எழுச்சிக்குரிய 1460 அல்லது 1461 ஆண்டு வட்டஞ்சார்ந்த.
Sottish
a. விடாக்குடிப் பழக்கமுடைய, மிடாக்குடியரான.
Sottishness
n. விடாக்குடிப் பழக்கம், மிடாக்குடி வெறிமயக்கம்.
Sotto voce
adv. தனக்குத்தானே, அடங்கிய குரலில்.
Sou
n. (வர.) பிரஞ்சு சில்லறைக்காசு, பிரஞ்சு வௌளியில் நுற்றில் ஒரு பங்கு.
Soubrette
n. பணிப்பெண், குறும்புச்சிறுமி.
Soucar
n. வட்டிக்கடைக்காரர்,வட்டித்தொழிலர்.
Souchong
n. இளந்தளிர்த் தேயிலையாற் செய்யப்படும் கடும்பானம்.
Soudanese,
ஆப்பிரிக்க சூடான் பகுதிக்குரியவர், சூடான் பகுதிக்கரிய, சூடான் பகுதி இன மக்களுக்குரிய.
Souffle
-1 n. (மரு.) நாடி மொருமொருப்பு, மென்னடியதிர்வொலி.
Souffle
-2 n. பொங்கு நுரையப்பம், மென்னுரை பொங்கச் செய்யப்பட்ட முட்டை வேவப்பம், (பெ.) மென்னுரை பொங்கச் செய்யப்பட்ட.
Sough
n. ஏங்கொலி, அலறொலி, இலையூடெழும் காற்றின் குலவை ஒலி.
Sought
v. 'சீக்' என்பதன் இறந்த-காலமுடிவெச்ச வடிவம்.
Soul
n. உயிர்நிலை, ஆன்மா, உயிர், பிராணி, ஆள், மனிதர், மாண்டவர் உயிர், ஆவி, மாண்டவர், வாழ்வுயிர், வாழ்பவர், உயிர்நலம், ஆன்மநலம், அருள்நிலை, இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை, தன்மான நிலை, ஒழுக்க அடிப்படை, பண்வுவகையில் புனைவார் திருவுரு, புனைவார் திருவுருவானவர், குறிக்கோள் உரு, குறிக்கோள் உருவினர், குறக்கோள் மாதிரி, தலைமைக்கூறு, தலைவர், இயக்குமுதல், இயக்குமுதல்வர், சத்து, உயிர்க்கூறு, உள்ளுறைகருப்பொருள், முக்கிய கூறு, மூலக்கூறு, கருமூலம், உள்ளுயிர், உள்ளுயிர்க்கூறு, உள்ளுயிர் போன்றவர், உள்ளுயிர்க்கூறு போன்றவர், ஊக்கம், உணர்வாற்றல், தெம்பு, அறிவாற்றல், இதயம், உணர்வாற்றலின் இருப்பிடம், மனம், அறிவாய்வின் இருப்பிடம், உள்ளம், அவா ஆர்வப்பிறப்பிடம், தன்னிலை, தான் எனும் தன்மைக்கூறு,தன்தனிநிலை, தன் தனிநிலைக்கூறு, முழுமைநிலைக்கூறு, நிலையானகூறு, அழியாக்கூறு, பெருந்தகைமைக் கூறு, உள்ளார்ந்த வாய்மைக் கூறு, வாத்தின் நுரையீரல், வில்யாழின் குரல் தண்டு.