English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sounding-rod
n. அடித்தேக்க மானி, கப்பலில் அடித்தேங்கு நீரளவு காணும் கருவி.
Soundings
n. pl. ஆழ்தட ஆய்வுக்குரிய கடலிடம், ஆழமிலாக்கடலிடம், சிற்றாழத்தலம், ஆழமானி இழைநீளத்துக் குட்பட்ட ஆழமுடைய இடம், கரையோரத் தலம்.
Soundness
n. முழுநலமுடைமை, நிறைநலத்தன்மை, நன்னிலை, ஊறுபடா நிலை, பழுதுபடா நிலை, உடைபடா நிலை.
Sound-track
n. திரைப்படத்தட்டின் ஒலிவரி.
Soup
n. வடிசாறு, இளம் வழக்கறிஞர்க்குத் தரப்படும் அரசியற் சார்பு வழக்குக் குறிப்பு.
Soupcon
n. மிகச் சிறு அளவு, முனிமுகம், சிறுசுவைக்கூறு.
Soup-kitchen
n. கஞ்சித் தொட்டி, ஏழைகட்குக் கஞ்சி ஊற்றுமிடம்.
Soupmaigre
n. காய்கறிப் பாழ்ங்கூற, நீரானக் காய்கறி வடிசாறு.
Soup-plate
n. ஆழ்குழி வடிசாற்றுத் தட்டம்.
Soup-ticket
n. கஞ்சிச்சீட்டு.
Sour
a. புளிப்பான, புளித்த, புளிக்க வைக்கப்பெற்ற, புரைத்த, காய்ப்புளிப்பான, புளிப்பு வாடையுள்ள, மண்வகையில் ஈரக் கசிவான, ஆள்வகையில் கடுகடுப்பான, எரிந்து விழுகிற, வெறுப்புத் தட்டிய, மனநிலை வகையில் சிடுசிடுப்பான, முகத்தோற்ற வகையில் சீறிய, வெறுப்புக்காட்டுகிற, (வினை.) புளிப்பாக்கு, புளிப்பாகு, ஆள்வகையில் கடுகடுப்பறு, எரிச்சலுறுவி, வெறுப்புத் தட்டச்செய், வெறுப்புக்கொள்.
Source
n. தோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம்.
Source-book
n. பெட்டக நுல்.
Sourdine
n. இசைப்பெட்டியின் மெல்லிசையழுத்தத் தடுப்பு.
Sourdough
n. பனிமண்டல விறலர், அலாஸ்காவில் ஒன்றிரண்டு குளிர்பரவங் கழத்தவர், முதுவர், ஓரிடத்திலேயே நீடுவாழ்பவர்.
Sourish
a. புளிப்பார்ந்த, சற்றே புளிப்பான, சற்றே சிடுசிடுப்பான.
Sourly
adv. புளிப்பாய், கடுகடுப்பாக, சிடுசிடுப்புடன்.
Sourness
n. புளிப்பு, புளிப்புடைமை, கடுகடுப்பு, எரிச்சல், சிடுசிடுப்பு.