English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Soursop
n. மேலே இந்தியத்தீவுகளிலுள்ள பழமரவகை, மேலே இந்தியதீவுகளிலுள்ள பழவகை.
Souse
n. உப்பிலிட்டது, ஊறுகாய், உப்புக்கண்டம், உப்புத்தசைக் கண்டம், உப்பிலிட்ட பன்றித்தலை, உப்பிலிட்ட பன்றிக்காது, உப்பிலிட்ட பன்றிக்கால், முட்டானைவு, ஈரத்தோய்வு, நீர்ம அமிழ்வு, முழு அமுக்கீடு, (வினை.) உப்பிலிடு, ஊறவை, ஊறுகாய் போடு, நீர்மத்தில் தோய்வுறுத்து, நீரில் அமுக்கு, மீதாக நீர்கொட்டு, முட்டநனைவி, குடியில் தோய்வி, (வினையடை.) தலைகுப்புற, தொப்பென்று, திடுதிப்பென்று.
Soutache
n. ஓரத் தையல் ஒப்பனை வாரிழை.
Soutane
n. குருமார் நீளிறுக்க உள்ளங்கி.
Souteneur
n. பரத்தை பங்கன், வேசியோடு உறவுகொண்டு அவள் ஊதியத்தல் வாழ்பவன்.
South
n. தெற்கு, தென்றல், நாட்டுத்தென்பகுதி, (பெ.) தெற்கில் உள்ள, தெறிகல் வாழ்கிற, தென்பகுதியிலுள்ள, காந்தமுனை வகையில் தெற்குநோக்கிய, (வினை.) தெற்குநோக்கி நகர், திங்கள் வகையில் குறிப்பிட்ட இடத்தின் சேண்செல் மைவரை கட, (வினையடை.) தெற்கில், தெற்குநோக்கி, தென்திசைக்க அருகில்.
South Downs
n. இங்கிலாந்தில் ஹாம்ப்ஷயர் சஸ்ஸக்ஸ் பகுதி.
South Kensington
n. தென் கென்சிங்குடனில் உள்ள பொருட்காட்சிச் சாலைகள், தென் கென்சிங்குடன் காட்சிச்சாலைத்தொடர்புடைய கலை-கல்வி பண்பாட்டுச் சூழல், (பெ.) தென் கென்சிங்குடன் காட்சிச்சாலை சார்ந்த, தென் கென்சிங்குடன் காட்சிச்சாலை கலை-கல்வி பண்பாட்டுச் சூழல் சார்ந்த.
South-bound
a. தெற்கு நோக்கிய.
South-country
n. நாட்டின் தென்பகுதி.
Southdown
n. ஹாம்ப்ஷயர்-சஸ்ஸக்ஸ் பகுதிச் செம்மறியாட்டு வகை, (பெ.) செம்மறியாட்டு வகையில் ஹாம்ப்ஷயர்-சஸ்ஸக்ஸ் பயிற்சியின வகை சார்ந்த.
South-east
n. தென்கிழக்குத் திசை, தென்கிழக்குப் பகுதி, தென்கிழக்குக் காற்று, தென்கிழக்கிலிருந்து வீசுங்காற்று, தென்கீழ்கால் நிலம், தென்கிழக்குக் காற்றின் வழயில் கிடக்கும் நிலப்பகுதி, லண்டன் அஞ்சல் துறைத் தென்கிழக்கு வட்டம், (பெ.) தென்கீழ்த் திசையான, தென்கிழக்கிலுள்ள, தென்கிழக்கிலிருந்து வீசுகிற, தென்கிழக்கு நோக்கிய, (வினையடை.) தென்கிழக்காக.
Southeaster
n. தென்கிழக்குக் காற்று.
Southeasterly
a. தென்கிழக்கு நோக்கிய, தென்கிழக்கிலிருந்து வருகிற, (வினையடை.) தென்கிழக்கு நோக்கி, தென்கிழக்கிலிருந்து.
South-eastern
a. தென்கிழக்கில் உள்ள, தென்கிழக்குத் திசையில் உள்ள, தென்கிழக்குக்குரிய, தென்கிழக்குத் திசைக்குரிய.
South-eastward
n. தென்கிழக்கிலுள்ள பகுதி, (பெ.) தென்கிழக்கு நோக்கிய, (வினையடை.) தென்கிழக்கு நாடி.
South-eastwardly
a. தென்கிழக்கு நோக்கிய, (வினையடை. ) தென்கிழக்கு நோக்கி.
South-eastwards
adv. தென்கிழக்கு நோக்கி.
Souther
n. தென்திசைவாணர், தெற்கத்தியர், தெற்கில் குடியிருப்பவர், (பெ.) தெற்கான, தெற்கினைச் சார்ந்த, தெற்கில் உள்ள, தெற்கு நோக்கியுள்ள, காற்று வகையில் தெற்கிலிருந்து வீசுகிற, தென்பாங்க ஆன,
Souther
n. தென்திசைக்காற்று, (வினை.) தெற்குநோக்கித் திரும்பு.