English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sponsor
n. பெயர்த்தந்தை, பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர், பெயர்த்தாய், பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர், ஆதரவாளர், பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர், ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர், ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர், (வினை.) பெயர்த்தந்தையாயிரு, பெயர்த்தாயாயிரு, ஆதரவாளராயிரு, ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு.
Sponsorial
a. பெயர்த்தந்தைபோன்ற, பெயர்த்தாய் போன்ற, ஆதரவாளருக்குரிய, ஆதரவான, பொறுப்பேற்பாதரவான, பேராதரவாளருக்குரிய, நல உத்தரவாதியான, பிறரொருவருக்காகத தன்னைப் பொறுப்பாளியாக்கிக் கொள்கிற.
Sponsorship
n. பெயர்த்தந்தை நிலை, பெயர்த்தாயர் நிலை, ஏற்பாதரவு, ஊக்க ஆதரவு, நல உத்தரவாதம்.
Spontaneous
a. தன் விருப்பான, தானே இயங்குகிற, தன்னியலார்ந்த, புறத்தூண்டுதலற்ற, புறக்காரணமில்லாத, முயற்சியில்லாதெழுகிற, பேணுது வளர்கிற, நோக்கமற்ற, (உயி.) இயல்பான, உள்ளார்ந்த அகத்தூண்டுதலான.
Spontaneously
adv. தானாகவே, தன்னியல்பாகவே, வலிய தன்விருப்பார, புறத்தூண்டுதல் இல்லாமலே, புறக்காரணம் எதுவுமின்றியே, பேணி வளர்ப்பாரில்லாமலேயே, முயற்சியில்லாமலே, எண்ணா நிலையிலேயே, தன்னக வேதியியல்பினாலேயே, தற்பிறப்பாகவே.
Spontneity
n. தன்விருப்பநிலை, தன்விருப்பியல்பு, புறத்தூண்டுதலில்லாமை, (உயி.) இயல்பாயியங்கும் நிலை, அகத்தூண்டுதலால் இயலும் நிலை.
Spontoon
n. படைவீரரின் குத்துவாள் வகை.
Spoofer
n. (இழி.) எத்தன்.
Spook
n. பேய், ஆவி உருவம்.
Spookish, spooky
பேய் உருச்சார்ந்த, பேய்த்தன்மையான.
Spool
n. கண்டு, நுல்சுற்றிவைக்கும் வட்டு, திரைப்படத்தில் தகடு சுற்றிவைக்குந் தண்டு, தூண்டில் கைப்பிடிமுனையிலுள்ள சுழல் உருளை, (வினை.) கண்டுமீது சுற்று.
Spoon
-1 n. கரண்டி, கரண்டி வடிவப்பொருள், கரண்டியுருவான துடுப்பு, குழிப்பந்தாட்டக் குமிழ்மட்டை, சுழல்மின்னிரை, இரைபோலத் தூண்டில்மீன் கவரும் சுழல் உலோகத்தகடு, (வினை.) கரண்டயால் எடு, கரண்டியால் எடுத்தருந்து, சிறிது சிறிதாக எடுத்துருந்து, தூண்டிலில் சுழல் மின்னிரை
Spoon
-2 n. கபடற்றவர், நாணமில் காதலர், (வினை.) ஏதிலாக் காதல் கொள்.
Spoon-beak
n. கரண்டி போன்ற அலகுடைய பறவை வகை.
Spoon-bill
n. கரண்டி போன்ற அலகுதடைய பறவை வகை.
Spooner, spoonerism
n. சகாரம், தலைப்பெழுத்துத் தற்செயல்மாற்று வழக்கு, தொடர்களில் தொடக்க எழுத்துக்களை மாற்றி அமைக்குஞ் சொற்பாணி, (எ-டு) அல்லன் மல்லல்ஷ்மல்லன் அல்லல்.
Spoon-fed
a. கரண்டியிலுட்டி வளர்க்கப்பட்ட, சிறுகச் சிறுகக் கூறிப் பயிற்றுவிக்கப்பட்ட, செயற்கையாக ஊக்கி ஆதரிக்கப்பட்ட, நாட்டுத்தொழில்கள் வகையில் இறக்குமதி வரிகளாலோ நன்கொடையுதவியாலோ வலிந்து வளர்க்கப்பட்ட.
Spoonfly
adv. மேலீடான உணர்ச்சிபகட்டுடன், விளயாட்டுத்தனமான, காதற் பாங்கில், மெல்லினிமையாக.
Spoon-meat
n. பாலுணவு, குழந்தை உணவு.