English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spoking-machine
n. பழுக்களுக்கு ஒத்த சாய்வு வழங்க உதவும் இயந்திரம்.
Spolia opima
n. போர்க்கொண்டி, பண்டை ரோமரிடையே வெற்றிபெற்ற தளபதி பகைத்தளபதியிடமிருந்து கைப்பற்றிய படைக்கலம், அரும்பெருஞ்சாதனை.
Spoliate
v. சூறையாடு, கொள்ளையிடு.
Spoliation
n. கொள்ளை, சூறையாட்டு, பாழடிப்பு, பாழாக்குஞ் செயல், வன்பறி, கொடும் பணப்பறிப்பு, வன்முறைச் சுரண்டல், சட்டத்துறையில் பத்திரக்கையாடல், ஆதாரம் பொய்ப்பிக்கும்படியான பத்திர மாற்றம்-அடியிற்புகுத்தீடு முதலிய தகாச் செயல்கள், சமயத் துறையில் போலி உரிமையுடன் மானிய வருவாய் சுரண்டல், போரரசு வகையில் நொதுமலர் கப்பற்கொள்ளையீடு.
Spoliator
n. கொள்ளையிடுபவர், பாழ்படுத்துபவர், கெடுப்போர், கேடு செய்வோர்.
Spondaic
a. இருநெடிற் சீர் சார்ந்த, ஈரழுத்த அசைச்சீர் சார்ந்த, அறுசீரடி வகையில் ஐந்தாஞ்சீர் இருநெடிற் சீரான, அறுசீரடி வகையில் ஐந்தாஞ் சீர் ஈரழுத்த அசைச் சீரான.
Spondee
n. இரு நெடிலசைச் சீர், ஈரழுத்த அசைச்சீர்.
Spondulicks
n. pl. (இழி.) பணம்.
Spondyl, spondyle
முதுகெலும்பின் தனிக்கண்ணி.
Sponge
n. கடற்பாசி உயிரினம், கடற்பாசி, கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு, கடற்பாசி ஒத்த பொருள், உறிஞ்சும் இயல்புள்ள பொருள், புளித்து நுரைத்த மாவு, களி, சதுப்பு நிலம், அழிக்கம் துடைப்புப் பஞ்சு, குளிப்புத் துடைப்புப்பஞ்சு, தேய்ப்புப்பஞ்சு, பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு, தாவர வகையில் பஞ்சுச் சுணை, குடிகாரன், தேய்ப்பு, துடைப்பு, ஒட்டுறிஞ்சி வாழ்வு, (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை, நீர்தோயவை, ஊறவை, துடைத்தழி, கடற்பஞ்சால் ஒற்றியெடு, ஈரம் நீக்கிவிடு, நீர் வடிந்து வற்றச்செய், உறிஞ்சு, கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு, கடற்பாசி தேடிக் கைப்பற்று, கெஞ்சிப்பெறு, கெஞ்சு முறைகளால் பெறு, கெஞ்சிப்பிழை, ஒட்டிப்பிழைத்து, வாழ்.
Sponge-cake
n. பூம்பஞ்சப்பவகை.
Sponge-gourd
n. சுரைத்துடைப்புக் கட்டி, சுரை போன்ற தொய்வகத் துடைப்புக்கட்டி.
Sponger
n. உறிஞ்சுபொருள், கடற்பாசி பயன்படுத்துபவர், துடைப்புக் கட்டி பயன்படுத்துபவர், துடைப்பவர், துடைத்தழிப்பவர், ஈரம் ஒற்றி எடுப்பவர், ஒட்டி உறிஞ்சி வாழ்பவர், கெஞ்சிப் பிழைப்பவர், கடற்பாசி சேகரப்படகு, துணியைத் திரைவுபடுத்துங் கருவி.
Sponginess
n. கடற்பஞ்சு ஒத்த பண்பு, நிறை உள்துணை உடைமை, தொய்வுடைமை, உறிஞ்சு தன்மை, உலோக வகையில் செறிவற்ற தன்மை.
Sponging
n. ஒட்டி உறிஞ்சுதல்.
Sponging-house
n. கடன்பட்டார் கடிகாவல் மனை.
Spongiopiline
n. புண்ணுக்குரிய செயற்கை மாவடைக்கட்டு, கடற்பாசி-நீர்மம்-தொய்வகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாவடைக் கட்டு.
Spongy
a. கடற்பாசியை ஒத்த, கடற்பாசி போன்ற, நுண்துளை நிறைந்த, நீண்டுசுருங்குந் தன்மையுள்ள, உறிஞ்சும் பண்புள்ள, அமிழ்வுடைய, அமுக்கத்தக்க, தொய்வுடைய, உலோக வகையில் செறிவற்ற.
Sponsion
n. பிணைமை, பிணையாய் நிற்குந்தன்மை, சார்பு ஏற்புறுதி, அனைத்து நாட்டுச் சட்டத்துறையில் நாட்டினிடம் தனியுரிமை பெறாமலே நாட்டுப்பேராள் நாட்டின் சார்பில் அளிக்கும உறுதி.
Sponson
n. கப்பலின் புற உந்துதளம், தளத்தின் புறத்தே உந்தும் பகுதி, போர்க்கப்பலில் பீரங்கி பயில்வதற்கான புடை உந்துதளம், உகைதண்டிற்குரிய முக்கோணத் துருத்து சட்டம்.