English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stereotyper
n. பாளத் தகட்டு அச்சிடுவோர்.
Sterile
a. தரிசான, விளைவற்ற, மலடான, வளமற்ற, வறண்ட, ஊதியந் தராத, கனியீனாத, நுண்மத் தீர்வான, நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற, மொழிநடை வல் செழுமையற்ற, கவர்ச்சியற்ற, சலிப்பூட்டத்தக்க.
Sterility
n. மலடு, இனப்பெருக்கத் தகுதியின்மை, தரிசு நிலை, விளக்கமற்ற தன்மை, மொழிநடை வளமின்மை, புது வளமின்மை, உரமின்மை, ஆற்றல் வளமின்மை, நோய் நுண்மத் தீர்வு நிலை.
Sterilization
n. நோய் நுண்மத் தீர்வாக்கம், கருத்திற வளங்கெடுத்தல், கருவளக் கேடு, வளக்கேடு, உரச்சத்தின்மை, உரவளக்கேடு.
Sterilize
v. நோய்நுண்மத் தீர்வு செய், நோய் நுண்மம் ஒழி, இனப்பெருக்கத்திறம் அழி, மலடாக்கு, விளைவற்றதாக்கு, வளமற்றதாக்கு,புதுவள ஆக்கங்கெடு, வறிதாக்கு, தரிசாக்கு.
Sterilizer
n. நோய்நுண்ம ஒழிப்புப்பொருள், நுண்ம ஒழிப்பாளர், நுண்மம் ஒழிப்பது, நுண்ம ஒழிப்புக்கருவி.
Sterlet
n. உணவு வகைச் சிறுமீன்.
Sterling
n. பிரிட்டிஷ் முத்திரைப்பணம், பிரிட்டன் செலாவணிப்பொன், கட்டளை மதிப்புவாய்ந்த பிரிட்டிஷ் பணம், ஒரு செம்பு மதிப்புடைய பழைய பிரிட்டிஷ் வௌளி நாணயம், (பெ.) பிரிட்டிஷ் கட்டளை நாணய மதிப்புடைய, முத்திரைப்பாண மதிப்பு வாய்ந்த, அப்பட்டமான, முகப்பு மதிப்புக்குக் குறையாத, உயர் உலோக வகையில் மெய்ம்மாற்றான, பட்டயமாற்று வாய்ந்த, மெய் மதிப்பார்ந்த, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய, அப்பழுக்கற்ற, மாற்றுக்குறையாத, வாசி தீர்வான, புறப்பகட்டுத் தோற்றமற்ற.
Stern
-1 n. கப்பல் பின்புறம், முறைப்பான, கடுகடுப்பான, வெடுவெடுப்பான, பல்லைக் கடித்துக்கொண்டிருக்கிற, கண்டிப்பான, ஒழுங்குமுறை இறக்கமான, வற்புறுத்திப் பணிய வைக்கிற, இரக்கமற்ற, நௌதவு நெகிழ்வு அற்ற.
Sternalgia
n. மார்பு வலி, இடமார்பு நோய்.
Stern-board
n. கப்பற் பின்புற இயக்கம், திரும்புதலில் வேக இழப்பு.
Stern-chase
n. கப்பல் பின் தொடர்வு, கப்பல் பின் துரத்தீடு.
Stern-chaser
n. கப்பல் பின்புறம் பீரங்கி, கப்பல் பின் துரத்தீட்டில் பயன்படும் பீரங்கி.
Stern-fast
n. கட்டுத்தளை, கப்பலைக்கட்டும் கப்பல்துறைக் கயிறு அல்லது சங்கிலி.
Stern-frame
n. கப்பல் பின்புறச் சட்டம்.
Sternly
adv. கடுமையாக, கடுகடுப்பாய், மிக கண்டிப்பாக, இரக்கமற்று, நெகிழ்வுற்று, விட்டுக் கொடுப்பின்றி.
Sternmost
a. கப்பலின் பின்கோடியான, பின்புறப் பின் கோடியான.
Sternness
n. கடுமை, முறைப்பு, கடுகடுப்பு, கண்டிப்பு, இரக்கமற்ற தன்மை, நெகிழ்வுற்ற தன்மை.
Sternoclavicular
a. மார்பெலும்பு-கழுத்துப்பட்டை எலும்பு சார்ந்த.
Stern-post
n. பயின் கந்து, கப்பல் திரும்புகட்டை தளைக்கப் பட்டிருக்கும் குத்துத்தறி.