English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stereo
n. பாள அச்சுத்தகடு, திட்பக்காட்சிக் கருவி அமைவு, (பெ.) பாள அச்சுச்சார்ந்த, திட்பக்காட்சி சார்ந்த.
Stereo
இசைத்தூண்டர், இசைப்பிரிப்பு, பிரிப்பிசை, இசைப்பெருக்கு
Stereobate
n. கட்டிட அடித்தளப் பாளம், கட்டிடம் எழுப்பப் படுவதற்குரிய திடமேடை.
Stereobatic
a. கட்டிட அடித்தளப் பாளத்திற்குரிய.
Stereochemistry
n. சேணிலை வேதியியல், விண்வௌதயில் உள்ள அணுத் தொடர்பால் பாதிக்கப்பெற்ற பொருளியைபு நிலை பற்றி ஆயும் வேதியியல் பிரிவு.
Stereochrome
n. பளிக்கு நீர்வண்ணச் சுவரோவியம்.
Stereochromy
n. பளிக்கு நீர் வண்ணச் சுவரோவிய முறை, பளிக்கு நீரால் கெட்டுப்படுத்தப்பட்ட நிறமுடைய சுவரோவிய முறை.
Stereogram, stereograph
n. திட்பக்காட்சிக் குறிப்புப் படம், திட்பக் காட்சிக் குறிப்பு வரைபடம், திட்பக் காட்சிப் படம், திட்பக் காட்சிக் கருவியமைவிற்கான இருகோண நிலைப் படங்களுள் ஒன்று.
Stereographic, stereographical
a. திட்பக்காட்சி சார்ந்த, திட்பக் காட்சிக் கருவியமைவுக்குரிய.
Stereography
n. திட்பக் காட்சி அமைவுமுறை.
Stereophonic
a. பலதிசை வரவுத் தொனியுடைய, ஒலி வகையில் பல திசையிலிருந்து வருவது போலமைந்த.
Stereopsis
n. இருவிழி இயைகோணக் காட்சி, இரு விழி இருகோண நிலைப்படக் காட்சியமைவு முறை.
Stereopticon
n. ஒருபட இருகாட்சி விளக்கு.
Stereoscope
n. திட்பக்காட்சிக் கருவியமைவு, இருகண்ணாலும் இருகோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக்காட்சி தோற்றுவிக்குங் கருவி.
Stereoscopic
a. திட்பக்காட்சிக் கருவியமைவு சார்ந்த.
Stereoscopist
n. திட்பக்காட்சியாளர், திட்பக் காட்சிக் கருவியமைவாளர்.
Stereoscopy
n. திட்பக்காட்சிக் கருவியமைவு முறை.
Stereotype
n. பாள அச்சு அட்டைத் தகடு, உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு, பாள அச்சுத்தகடு வழங்கீடு, பாள அச்சுத் தகட்டாக்கம், மாறாப் படிவுரு, நெகிழ்வுற்ற உருச்சட்டம், நிலைத்த உளநிலைப் படிவம், (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட, பாள அச்சுமுறை சார்ந்த, (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு, பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு, மாறாநிலைச் சட்டமாக்கியமை, மாறாநிலைப்படுத்து, மாறாச்சலிப்பூட்டு, மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு, நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு, மாறா மரபுமுறைப்படுத்து.
Stereotype-block
n. பாள அச்சுத்தகடு இணைத்த கட்டை.
Stereotyped
a. பாள அச்சுப்பதிவு செய்த, மாறா உருப்படிவமாய்விட்ட, கால இடநிலை வேறுபாடற்ற, கடினமாக்கப்பட்ட, மாற்றமுடியாத.