English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stiffness
n. பிடிவாதம், விறைப்பு.
Stifle
-1 n. குதிரை பின்கால் மேல்மூட்டு, குதிரை பின்கால் மேல்மூட்டு நோய்.
Stifle
-2 v. நெரித்து விடு, திணற அடி, திக்குமுக்காடச் செய், மூச்சு விடுவதை நிறுத்திக் கொல்லு, காற்றினை அகற்றிக் கொல்லு, முத்தங்கள்-பரிசுகள்-அன்பு முதலியவற்றால் மூழ்கடித்துவிடு, சாம்பால் முதலியவற்றைக் குவித்துத் தீயினை அணைத்துவிடு, சாம்பல் முதலியவற்றால் தீயினைக்
Stifle-bone
n. குதிரை பின்கால் மூட்டெலும்பு, குதிரை முழங்காற் சில்லு.
Stifle-joint
n. குதிரை பின்கால் மூட்டு.
Stifle-shoe
n. குதிரையின் பின்கால் மூட்டு இலாடம், மூட்டுநோயுள்ள காலைப் பயன்படுத்தி நோய்நீக்க உதவும்படி நோயுறாக் கால்மூட்டுக்கு இடப்படும் இலாடம்.
Stigma
-1 n. புகழில் ஏற்படும் இழுக்கு, நற்பெயருக்கு ஏற்படுங் கறை, சூட்டுத்தழும்பு, (தாவ.) சூலக முகடு, பூவின் கருவகப் புழைவாய் முகடு.
Stigma
-2 n. கறை, வடு, புகழ்மாசு, திருச்சபை வழக்கில் இறையருளால் திருத்தொண்டருக்கு நேர்வதாகக் கருதப்பட்ட சிலுவையேற்றத் தழும்பு, தனிக்குறி, தனி அடையாளம், கெடுகூறு, கெடுதடம், (மரு.) தனிநோய்க்கூறு, நோய்க்குரிய சிறப்பியல்புக்கூறு, (உள்., வில.) மறு, மச்சம், கசி பொட்டு
Stigmatic
n. வடுவுடையவர், அருவருப்பான உருவமுடையவர், உருந்திரிபுற்றவர், திருச்சபை வழக்கில் அருட்டழும்பு பெற்றவர், (பெ.) புகழில் மாசுற்ற, இழுக்கியல்புடைய, நற்பெயர்க் கறையுடைய, நற்பெயர்க்கறை இயல்புவாய்ந்த, சூடிடப்பட்ட, சூட்டுக்குறியுடைய, விகாரமான, அருவருப்பாக உருத்திரிபுற்ற, ஒருமுகப்புடைய, கண்விழி வகையில் ஒருமுகப்புக்கேடு அற்ற.
Stigmatism
n. புகழ் மாசு, வடுபட்ட நிலை.
Stigmatist
n. அருள் வடுவுற்றவர்.
Stigmatization
n. அவதூறு, மாசுரை, படிமாசு, கற்பிக்கப்பட்ட மாசு, குற்றச்சாட்டு, வடுப்பட செயல், கசிபொட்டேற்றுவிப்பு.
Stigmatize
v. வடுப்படுத்து, நற்பெயருக்குக் கறை வருவி, அவதூறு கூறு, இகழ்கற்பி, குற்றப்பழிச்சாட்டிற்கு ஆளாக்கு, பழிக்குரியவராகக் குறிப்பிடு, உரிய பழிக்கூறாகச் சுட்டியுரை, சூட்டித் தழும்பிடு, கசிபொட்டேற்று, அறிதுயில் வசியத்தால் குருதிக் கசிபொட்டுக்கள் ஏற்படும் படி செய்.
Stik-ball
n. நச்சாவி எறிகடம், கொள்ளைக் கப்பல்களால் கடற் போரில் எதிரி கப்பல் முன் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட முற்கால நச்சாவிக் குடுவை.
Stikke
n. வளைமதில் வலைப்பந்தாட்டம், புல்வௌத வரிப்பந்தாட்டத்தைப் போன்று ஒன்பதடி உயரச் சுவர்களாற் சூழப்பட்ட களத்து மையத்தில் வலைகட்டி ஆடப்படும் விளையாட்டு வகை.
Stile
-1 n. கடவேணி, சுவரின் அல்லது வேலியின் மீது ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்குதவற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி.
Stile
-2 n. நிலவரிச்சட்டம், கதவு சுவர் வேலி முதலியவற்றின் பாவு கூற்றில் நிலைக்கம்ப உறுப்பு.
Stiletto
n. கரிகை, குறுவாள், துளையாணி, சிறு கண்ணியின் நுண்புழைகள் செய்வதற்கான குத்தூசி, (வினை.) சுரிகையால் குத்து.
Still
-1 n. மோன அமைதி, இயங்கா நிழற்படம், இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம், (பெ.) அசைவற்ற, இயக்கமற்ற, ஓசையற்ற, சந்தடியில்லாத, அசைவோ சந்தடியோ இல்லாத, அலையாடாத, அலைவற்ற, உலைவற்ற, உயிர்ப்பற்ற, செயலற்ற, உயிரில்லாத, ஔதராத, பளபளப்பற்ற, மினுங்காத, (வினை.) அமைதியாக்கு,
Still
-2 n. வாலை, வெறிய நீர்மங்களைக் காய்ச்சி வடிததிறக்கு வதற்கான கலம், (வினை.) (செய்.) வடி, வடித்திறக்கு, வாலையில் வடித்துச் சாராயமாக்கு.