English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stillage
n. விசித்தட்டு, நீர்க்கசிவு வடிவதற்காகப் பொருள்களை நிலத்திற்படாமல் வைத்திருப்பதற்குரிய விசிப்பலகைச் சட்டம்.
Still-born
a. செத்துப்பிறந்த.
Still-bugle
n. அமைதி ஆணை ஊதல், அடுத்த ஆணைவரை கப்பலோட்டிகள் அசைவற்றிருக்கவேண்டுமென்னும் ஆணைகுறித்த குழலுதல்.
Still-fish
v. நங்கூரப் படகிலிருந்து மீன்பிடி.
Stilling, stillion
மிடாவடை, மிடாவுக்கான ஆதாரச் சட்டம்.
Stillness
n. அசைவின்மை, அமைதி.
Still-room
n. வாலை அறை, பெரிய வீடுகளில் வீட்டுப்பாதுகாப்புப் பொறுப்புடையவரின் சரக்கறை.
Stilly
-1 a. அமைதியான, ஓசையற்ற, அசைவற்ற.
Stilly
-2 adv. அமைதியாக, பேசாமல், அசையாமல்.
Stilt
n. தாவுநடைக்கோல், சிறுவர் விளையாட்டில் தாவிமிதித்தேறி நின்று தாண்டி நடக்கப் பயன்படுத்தும் பொய்க்கால் இரட்டை நெடுங்கழி, நெட்டுயர் உதைகால், நாரையின் நெடுங்காற்புள், (பே-வ) கலப்பைக் கைப்பிடி, (வினை.) தாவு நடைக்கோல் மீது நிற்கவை, மிக உயரமாக்கு.
Stilt-bird
n. நாரையின நெடுங்காற்புள்.
Stilted
a. தூக்கி உயர்த்திக் காட்டப்பட்ட, போலி உயரமுடைய, இலக்கிய நடை வகையில் பாலி ஆரவாரப் பகட்டுடைய, வெற்றாரவார ஒலியுடைய.
Stilton
n. உயர்தரப் பாலடைக்கட்டி வகை.
Stilt-petrel
n. நெடுங்காற் சிறு கடற்பறவை வகை.
Stilt-sandpiper
n. ஈர மணல் வௌதகளில் திரியும் நெடுங்காற் பறவை வகை.
Stimulant
n. கிளர்ச்சியூட்டி, தூண்டி எழுப்பும் பொருள், ஊக்குப்பண்பு, எழுச்சியூட்டுந் திறம், கிளர்ச்சியூட்டும் மருந்து, தூண்டி எழுப்பும் உணவு, வெறிக்குடி, (பெ.) கிளர்ச்சியூட்டுகிற, (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
Stimulate
v. கிளர்ச்சியூட்டு, உயிராற்றல் தூண்டி எழுப்பு, தாற்றுக்கோலால் தூண்டு, செயல் விரைவுபடுத்து.
Stimulating
a. விரைவூக்கந் தருகிற, கிளர்ச்சியூட்டுகிற, ஊக்கம் ஊட்டுகிற.
Stimulative
a. செயலுக்கும் பாங்குள்ள, உயிராற்றல் தூண்டும் இயல்புடைய.
Stimulator
n. கிளர்ச்சியூட்டுபவர், உயிராற்றல் தூண்டுபவர், புறந்தூண்டுதற் கருவி.