English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stink-stone
n. கவிச்சிக் கல், வெட்டியெடுக்கும்போது புழுங்கல்வாடை வீசுகிற சுண்ணாம்புக் கற்பாறை வகை.
Stink-trap
n. முடையடைப்பு, சாக்கடைப் புழையிலிருந்து முடைநாற்றம் பரவுதல் தடுக்கும் அமைவு.
Stint
n. வழங்கீட்டு எல்லை வரையறை, தட்டுப்பாடு, முட்டுப்பாடு, எல்லைக்கட்டு வரையறை, படிவரையளவு, படியளிப்பளவு, ஒதுக்கப்பட்ட பங்கீட்டெல்லை, தவணை முகப்பு அளவு, நிலக்கரிச்சுரங்கத்தில் வேலைத்தவணை முறையில் வெட்டி எடுக்கப்படவேண்டிய பரப்பளவு, (வினை.) கசடி வழங்கு, வரைந்தளி, கையிறுக்கம் பண்ணு, அடக்கிச் செலவழி, முடைப்பட்டு வாழ், வேண்டா வெறுப்புடன் கொடு, செயல் வகையில் விட்டொழி.
Stinted
a. கசட்டளவான, கருமித்தனமான.
Stintedly
adv. கடுஞ்செட்டாக.
Stinting
n. கசடுதல், (பெ.) கசடுகிற.
Stintless
a. கசடாத, அளவு வரையாத.
Stipate
a. (தாவ.) நெருக்கமான, செறிவாக அமைந்த.
Stipe
n. (தாவ., வில.) தண்டு, காம்பு, விலங்குகளில் உறுப்புத் தாங்கும் காம்பு போன்ற ஆதாரம், (தாவ.) சூலக அடியைத் தாங்கும் ஆதாரம், இலைபோன்ற உறுப்பின் காம்பு, நாய்க்குடைத்தண்டு.
Stipel
n. (தாவ.) சிற்றிலைச் செதில் உறுப்பு.
Stipellate
a. (தாவ.) சிற்றிலைச் செதில் உறுப்புடைய.
Stipend
n. உதவிப்பணம், உதவிச்சம்பளம், பயிற்சிக்கால உதவி ஊதியம், பரிசூதியம், வரைகூலி, பருவப்படி, சமய குருவின் வாழ்க்கைப்படி.
Stipendiary
n. உதவிச்சம்பளம் பெறுபவர், பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுபவர், ஊதியம் பெறும் அமைதிக்காப்பு நடுவர், (பெ.) பருவ ஊழியவூதியம் பெறுகிற, உதவிப்படிச் சம்பளம் வாங்குகிற, பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுகிற.
Stipple
n. புள்ளி ஓவியம், புள்ளிகளிட்ட வேலைப்பாடு, (வினை.) புள்ளிகளாற் செதுக்கு, புள்ளிகளால் வண்ண ஓவியந்தீட்டு, புள்ளியிட்டும் படம் வரை, புள்ளிகளாற் படம் வரையும் முறை கையாளு.
Stippled
a. புள்ளியிட்ட, புள்ளி ஓவியமுறையான.
Stipple-graver
n. செதுக்கோவியர் புள்ளியிடு கருவி.
Stippler
n. புள்ளிமுறை ஓவியம்.
Stippling
n. புள்ளி முறை ஓவிய வரைவு.
Stipulate
-1 v. ஒப்பந்தப்படுத்து, முன்வரை செய், உடன்படிக்கை வகையில் முக்கிய பகுதியாகக் குறிப்பிடு, தனிப்பட வற்புறுத்து, உடன்படிக்கையின் கூறாகக் கோரு, பேரத்தின் கூறாக வேண்டு.