English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stimulus
n. புறத்தூண்டுதல், புறத்தூண்டுதல் தரும் பொருள், நல்லாயர் கைக்கோல் முனை, திருமடத்தலைவர் கோல்முகடு, (உயி.) உயிர்த்தசையியக்கந் தூண்டும் பொருள், (தாவ.) கொடுக்குமுனை, நச்சப்பூச்சி முள்.
Sting
n. கொடுக்கு, கொட்டும் உறுப்புமுனை, பாம்பின் நச்சுப் பல் முனை, பூச்சி வகையின் கொட்டும் உறுப்பு, (தாவ.) கொடுக்கு உறுப்பு, நச்சுப் பூச்சி முள்ளிழை, கொட்டுதல், கொடுக்கெறிதல், கொட்டுப்புண், கொட்டுதலால் ஏற்படுங்காயம், கடுப்பு, கொட்டுதலால் ஏற்படும் நோவு, குத்துமுள், குத்துமுனை, தாக்கு முனை, தாக்காற்றல், நோவுறுத்தும் கருவி, தீங்கிழைக்கும் ஆற்றல், வேதனைக் கடுமை, கொடும் பகைமை, ஆற்றல் முனை, விசைமுகப்பு, கூர்மை, விறுவிறுப்பு, திறமிக்க சொல் துணுக்கின் தாக்குதிறம், (வினை.) கொட்டு, கொடுக்கினால் தாக்கு, கொட்டிக் காயம் உண்டு பண்ணு, கடுப்பு உண்டுபண்ணு, கொட்டி நோவுறுத்து மனவேதனையூட்டு, சுறீரெனத் தாக்கு, கொட்டும் ஆற்றல்பெற்றிரு, வேதனையயூட்டும் ஆற்றல் பெற்றிரு, கொட்டும் ஆற்றலைப் பயன்படுத்து, ஏய், மோசடிக்குள்ளாக்கு, கடுப்புக் கொள், கொட்டினாற் போன்ற வேதனை கொள், கைப்பற்று, சிக்கவை, (இழி.) பெருஞ்செலவுக்குள்ளாக்கு, கடுஞ்செலவில் சிக்கவை.
Sting-bull
n. புரை புண் உண்டாக்கவல்ல மீன் வகை.
Stinger
n. கடுநோவூட்டுபவர், கொட்டுவது.
Stinginess
n. கஞ்சத்தனம், கடும்பற்றுள்ளம்.
Stinging-nettle
n. காஞ்சொறி வகை.
Sting-ray
n. வான் போன்ற வாலால் தாக்கும் மீன் வகை
Sting-winkle
n. சிப்பிகளைத் துளைக்கும் கொடுக்கிழையுடையசிப்பி வகை.
Stingy
a. கஞ்சத்தனமான, கையிறுக்கமான.
Stink
n. கவிச்சி, அருவருப்பான முடைநாற்றம், (வினை.) முடைவீசு, அருவருப்பான முடைநாற்றம் உடையதாயிரு, (இழி.) முடைநாற்றத்ரதைக் கூர்ந்துணர்.
Stink-alive
n. இறந்தபின் விரைந்து முடைநாற்றம் வீசும் மீன் வகை.
Stinkard
n. முடை நாற்றமுடையவர், முடைநாற்ற விலங்கு, முடைநாற்றம் வீசுகிற வளைக்கரடி வகை.
Stink-bomb
n. கவிச்சிக் குண்டு, முடைநாற்ற வெடிகுண்டு.
Stinker
n. முடைநாற்றமுடையவர், முடைநாற்ற விலங்கு, முடைநாற்றக் கலம், முடைநாற்றக் கடற்பறவை வகை, அருவருப்பான மனிதர், அருவருப்பான பொருள், அருவருப்பான ஒன்று.
Stink-horn
n. கவிச்சிக் காளான், முடைநாற்றம் வீசம் காளான் வகை.
Stinking
a. முடைநாற்றமுடைய, அருவருப்பான, வெறுக்கத்தக்க.
Stinking-weed, stinking-wood
n. கவிச்சிவாகை, முடைவீசும் நிலவாகை வகை.
Stink-pot
n. முடைநாற்றக் கலம், கப்பற்போரில் முன்பு பயன்படுத்தப்பட்ட நச்சாவிக்கலம், கெடுகேடன், கெடு கேடான பொருள்.
Stinks
n. pl. (இழி.) வேதியியல், (இழி.) இயல்நுல், (இழி.) வேதியியலாளர், (இழி.) இயல்நுலறிஞர்.