English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stretcher
n. நீட்டுபவர், விரித்து வைப்பவர், நீட்டுவது, விரித்து வைப்பது, கையுறை-தொப்பி முதலியன விரித்து வைப்பதற்குரிய கருவி, ஒவியர் திரை உறுதிச்சட்டம், தூக்கு கட்டில், நோயாளி-காயம்பட்டோ ர் ஆகியவர்களை இட்டுச் செல்லும் தூக்குபடுக்கை, படகுத் தண்டுகைப்பு விட்டம், இயந்திரக் கிடைநிலை உறுப்பு, இயந்திரக் குறுக்குச் சலாகை, சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல், மிகைநவிற்சி, புளுகு.
Stretcher-bond
n. சுவர் முகப்பு நீள வாட்டுச் செங்கல் அமைப்புமுறை.
Strew
v. சிதறு, தூவு, சிதறுண்ட சிறு பொருட்களால் அரைகுறையாக மூடு.
Strewed
v. 'ஸ்டிரியூ' என்பதன் இறந்தகாலம், 'ஸ்டிரியூ' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Strewn
v. 'ஸ்டிரியூ' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Stria
n. (உள்., தாவ., வில., மண்.) படுவரி, மேற்பரப்பில் உள்ள படுக்கைக்கோட்டு வரி அடையாளம், படுகை மடிப்பு, வரை, கிடைக்சாய்வாமி, படுவரித்தொகுதி, கணிப்புவடு, சாய்வரிக்குறிப்பு, சாய்வரி இடைவிளிம்பு.
Striate
a. சால்வரி வாய்ந்த, வரிவரியான கிடைநிலைப் பள்ளமார்ந்த, (வினை.) வரிவரிப் பள்ளமாக்கு.
Striately
adv. வரிவரிப்பள்ளமாய்.
Striation
n. வரிவரிப்பள்ளம் அமைத்தல், வரிவரிப்பள்ள அமைப்பு.
Striature
n. வரிவரிப் பள்ளப் பாங்கு.
Stricken
-2 v. 'ஸடிரைக்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Stricken
-1 a. துன்பப்பட்ட, நோயால் பீடிக்கப்பட்ட, அடிபட்ட, வேட்டையில் காயமேற்ற, மூதூர்ந்த, முதுமையேறிய.
Strickle
n. தலைதட்டுக்கோல், முகத்தலளவையில் தலைதட்டியளப்பில் பயன்படுத்தப்படுங் கோல்.
Strict
a. கண்டிப்பான, தட்டுத்தளர்வற்ற, விட்டுக்கொடுப்பற்ற, மட்டுமழுப்பலில்லாத, வரம்பு மீறாத, விதிவிலக்கிற்கு இடந்தராத, சொற்பொருள் வகையில் திரிபு தளர்விற்கு இடமற்ற.
Strictly
adv. கண்டிப்பாக.
Stricture
n. கண்டனம், மிகு கட்டுப்பாடு, குற்றங்குறை தெரிவிப்பு, இறுக்கம், வழியடைப்புச் சிக்கல், (மரு.) நாடி நரம்பு நாளங்கள் வகையில் நெரிசற் கோளாறு.
Stride
n. தாவு அடி, நீள அடியெல்லை, (வினை.) தாவி நட, நீளடியிட்டு நட, குதிரை மீது கால் பரப்பியமர், ஏறிச் சவாரி செய்.
Stridence
n. உரத்த கடுங்குரல்.
Strident
a. உரத்த கரகரப்பொலயுடைய.