Strike
n. தட்டு, தட்டொலி, தலைதட்டுக்கோல், முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல், வேலைநிறுத்தம், வாணிகத் திடீர் வெற்றி, குருட்டடிப் புதை வளப்பேறு, நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு, வான்தாக்கு, வானத்திலிருந்து செய்யும் தாக்குதல், தாழ்க்குழி, பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு, தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி, (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை, அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு, (மண்.) படுகைக் கிடைமட்டவரை, (வினை.) அடி, அறை, கருவிகொண்டு தாக்கு, ஓங்கிவெட்டு, குத்து, கொட்டு, மிதி, மோது, தட்டு, மூட்டு, கப்பல்வகையில் சென்று தட்டுறு, மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு, மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு, மணி அடித்துத் தெரிவி, வெடி ஒலி எழுப்பு, தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று, தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு, தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு, வீசி அடி, விசிறி எறி, விசையுடன் அனுப்பு, பந்துவகையில் எட்டியடி, சென்று தட்டுறு, மோதப்பெறு, கையொடு கை தட்டு, வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள், சென்றெட்டு, சென்றெழுத்து, அழுத்து, அச்சடி, முத்திரை பதியவை, குத்தி உட்செலுத்து, துளைத்து இறுக்கு, உள்திணி, உட்பாய்ச்சு, ஊடுருவிச்செல், வேர்வகையில் பாயவிடு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி, இடையிட்டு நுழை, மனத்தில் பதியவை, மனங்கொள்ளுவி, புலங்கொள்ளுவி, மனத்தில் சென்று பதிவுறு, மனத்தில்படு, புலங்கொளப் பெறு, கருத்தில் தென்படு, கவனத்துக்கு வந்துறு, நினைவுக்கு வா, அடித்தத் தவை, துவைத்துருவாக்கு, தம்பட்டமடி, உருவாக்கு, கருத்துருவாக்கு, கருத்துருவாகப் பெறு, ஆக்கிச் சமை, போலாக்கு, முனைப்பாக வந்து விழு, வந்து மேல்விழு, மின்னல்-இடி வகையில் வந்துவிழு, வந்து நேர்வுறு, தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு, வலிமையுடன் வந்தடை, அதிர்ச்சியூட்டும்படிவந்தடை, முனைப்பாகப் படு, முனைப்பாகத் தெரிய வரலுறு, திடுமென மேற்கொள், புதிது மேற்கொள், நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள், ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு, பாதையில் சென்றெய்து, பாதையில் செல், நாடு, நாடி எழு, நாடித்திரும்பு, புறப்பட்டுச்செல், செயலில் முனை, செய்துமுடி, செய்து நிறைவேற்று, தாவிச்செல், வேகமாகச் செல், பாய்வுறு, தனிப்படக் குறித்துக்காட்டு, நோய் வகையில் பீடித்தல் செய், தொடர மறு, கோடு முதலியன வரை, பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு, அகற்று, வேலை நிறுத்தஞ் செய், தலைதட்டி அள, ஐந்தொகை பார், கணக்கு முடித்துக்காட்டு, சராசரி காண், முறைகாணாயம் ஒப்புருப்படுத்து, இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு, கொடி தாழ்த்து, சரணடை, கப்பற்பாய் இறக்கு, கூடாரம் இறக்கு, பண்மீட்டி எழுப்பு, இசைக்கருவி மிழற்று.