English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stromatic
a. உயிர்ம உட்சட்டஞ் சார்ந்த, உயிர்ம உட்பிழம்புச் சட்டக்கூறு சார்ந்த.
Strong
a. வலிமை வாய்ந்த, பலமான, வல்லமை வாய்ந்த, வெல்திறமிக்க, தோலாத, செல்வாக்குமிக்க, செல்திறமிக்க, உடலூமுடைய, உடல்நல உறுதியுடைய, ஆற்றல் வாய்ந்த, திண்ணிய, கெட்டியான, திடமான, உரம் வாய்ந்த, உறுதி வாய்ந்த, கட்டுறுதியான, வளையாத, முறியாத, ஊடுருவ இடந்தராத, உடையாத, கிழியாத, தேய்வுறாத, கலைக்க முடியாத, நிலையான, நிலைநிறுத்தப்பட்ட, தாங்குந் திறமையுடைய, தாக்குப் பிடிக்கக்கூடிய, மாற்றமுடியாத, மாறாத, வன்தாக்குடைய, வலிமையுடன் செயலாற்றுகிற, செயலுக்கமுடைய, ஊக்க உரமுடைய, பயன் முனைப்பான, விளைவூக்கமுடைய, வேகமார்ந்த, முடிவுநோக்கி விரைகின்ற, ஐயுறவற்ற, மயக்க தயக்கமற்ற, பண்பில் மேம்பட்ட, நிறவகையில் முனைப்பான, பேச்சுவகையில் கடுமையான, கடுஞ்சொல் வழங்குகிற, வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க, எண்தொகையளவுடைய, செறிவார்ந்த, பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த, காரமான, மது வகையில் வெறிமிக்க, ஊசிப்போனா, தீவாடையுடைய, புளிப்பான, சொல்வகையில் பொருட் செறிவுமிக்க, மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய, (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த, (இலக்.) வன்திரியியலான, வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற, வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Strong-box
n. வன்காப்புப் பெட்டி, சேமக்காப்புப் பேழை.
Stronghold
n. அரண்காப்பு, கோட்டை, வன்காப்பிடம், புகலிடம், தஞ்சம், பிடிப்பிடம், வன்காப்பானவர்.
Strongish
a. வலிமைப்பகட்டான, சற்றே மிகுவலிமை வாய்ந்த.
Strongiy
adv. வலிமையுடன், திண்ணியதாக, உறுதியாக, வேகமாக, வற்புறுத்தி.
Strong-minded
a. வன்னெச்சமுடைய, பெண்கள் வகையில் ஆண்களோடு இணையான அறிவு-சட்ட உரிமை வேண்டுகிற.
Strong-room
n. வன்காப்பறை, சேமக்காப்பறை.
Strontia
n. மஞ்சள் நிற அரு உலோக வகையின் உயிரகை.
Strontian
n. மஞ்சள் நிற அரு உலோக வகையின் உயிரகை, (பெ.) மஞ்சள் நிற அரு உலோக வகையின் உயிரகையாலான.
Strontium
n. மஞ்சள் நிற அரு உலோக வகை.
Strop
n. தீட்டுவார், இழுப்புப்பபட்டை, (வினை.) வாரில் தீட்டு.
Strophanthin
n. நெஞ்சுவலிமைக்கான தாவர நச்சுப்பசை மருந்து வகை.
Strophe
n. பண்டைய கிரேக்க நடனப்பாடல் வகையில் இசைக்குழுவின் முதற்பாடற் கூறு, எதிர்ப்பாடற் கூறு, செய்யுட் கூறு.
Strove
v. 'ஸ்டிரிவ்' என்பதன் இறந்த காலம்.
Strow
v. 'ஸ்டிரியூ' என்பதன் பழைய வடிவம்.
Strowed
v. 'ஸ்டிரோ' என்பதன் இறந்த காலம்.
Strown
v. 'ஸ்ட்ரோ' என்பதன் முடிவெச்சம்.
Strppings
n.pl. ஒட்டக்கறந்த பால், கடைசியாகக் கறந்த பால்.
Strrrup-pump
n. தீயணைப்பு மிதிப்பொறி.