English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Struck
v. 'ஸ்டிரிக்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Structural
a. கட்டமைப்புச் சார்ந்த, கட்டிட அமைப்பிற்குரிய, அமைப்பாண்மைத்திறஞ் சார்ந்த.
Structurally
adv. அமைப்பு முறையில், கட்டிட அமைப்பு முறைப்படி.
Structure
n. கட்டிட அமைப்பு, கட்டிடம், கட்டமைப்பு, அமைப்புமுறை, அமைப்புச்சட்டம், கட்டமைப்புப் பொருள், கட்டமைக்கப்பட்ட ஒன்று.
Structureless
a. அமைப்புமுறையற்ற, ஒழுங்கின்றிக் கட்டப்பட்ட.
Struggle
n. போராட்டம், கைகலப்புச் சண்டை, கடும்பூசற் போட்டி, கடும் எதிர்ப்பு மல்லாட்டம், அயரா அரும்பாடு, விடாப்பிடி எதிர்ப்பு முயற்சி, இடரெதிர்த்த நீடித்தகடுமுயற்சி, பேரெதிர்ப்பு முயற்சி, திமிறியடிப்பு, துடிதுடிப்பாட்டம, (வினை.) எதிர்த்துப் போராடு, சச்சரவிடு, எதிர்த்து மல்லாடு, கடும எதிர்ப்புக்காட்டு, நீடித்த கடுமுயற்சி செய், கடும்போட்டியிடு, முண்டியடித்துக்கொண்டு செல், திமிறமுயலு, கைகால் அடித்துக்கொண்டு விடுபட முயற்சி செய், துடிப்பாட்டமாடு.
Struggler
n. போராடுவோர், கடும் எதிர்ப்பாளர், கடுமுயற்சி செய்பவர்.
Struldbrug
n. சாகா வரமுடை முதிர்வர்.
Strum
n. நாணுளர்வு, நரப்பிசைக்கருவியின் நரம்பு முரல்வு, நரப்பிசைக்கருவியின் தந்தித் தெறிப்பு, (வினை.) நாணுளர்.
Struma
n. கண்டமாலை நோய், குரல்வளைச்சுரப்பி வீக்கம், (தாவ.) திண்டுபோன்ற உறுப்புத்தடிப்பு.
Strumpet
n. பொதுமகள், வேசி.
Strung
v. 'ஸ்டிரிங்' என்பதன் இறந்தகாலம்.
Strut
-1 n. தத்துநடை, வீண்பெருடை நடை, (வினை.) தத்துநடைநட, வீண்பெருமையோடு நட.
Strut
-2 n. விட்டக்காழ், விட்டத்தின் குறுக்காக உறுதிநாடி இடப்படும் இரும்பு அல்லது மர ஆப்பு, (வினை.) வீட்டக்காழழூ கொடுத்து வலுப்படுத்து.
Struthio
n. நெருப்புக்கோழி வகை.
Struthious
a. நெருப்புக்கோழிக்குரிய, நெருப்புக்கோழி போன்ற, நெருப்புக்கோழியினஞ் சார்ந்த.
Strutting
a. தத்தி நடக்கிற, செருக்குநடையுடைய.
Strychnia, strychnine
n. எட்டிச்சத்து, முனைத்த தாவர நஞ்சுவகை, நரப்பு மருந்தாகப் பயன்படும் நச்சு மருந்து வகை.
Stub
n. மர அடித்தூறு, பல் அடிக்கட்டை, எழுதுகோலின் தேய்ந்த அடிக்குற்றி, நாய்வாலின் தறிகட்டை, கொழுந்தாணி, மொட்டை ஆணி, இலாடத் தேய்விரும்பு, தாள்முறி அடித்துண்டு, (வினை.) தூறை வேராடு கல்லியெடு, அடித்தூறு அகற்று, வெட்டி அடிக்கட்டையாக்கு, அடிக்கட்டையில் அடித்துக் காயப்படுத்து, அடிக்ட்டை மீது மோது, அடிக்கட்டை மோதுவது போல் மொட்டை முனைமீது மோதப்பெறு, புகைச்சுருட்டு அடிக்குச்சினை அழுத்துவித்தவி, அடிக்குச்சினை அவித்தடக்கு.
Stubbed
a. தறித்துவிடப்பட்ட, அடிக்கட்டையாக விடப்பட்ட தூறுவடிவான, அடித்தூறு செதுக்கி அகற்றப்பட்ட, அடிக்கட்டை போல மொட்டை மொழுக்கையான.