English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Saying
n. சொல்லுதல், பழஞ்சொல், முதுமொழி.
Sbi rro
n. இத்தாலிநாட்டுக் காவல்துறையினர்.
Scab
n. அசறு, கடுந்தழும்பு, சிரங்கு, கால்நடைச்சொறி, தாவரப் பூஞ்சைக்காளான் நோய், கசடன், அழுக்குப்பிடித்தவன், கருங்காலி, வேலை நிறுத்தத்தில் சேர மறுப்பவர், தொழிற்சங்கத்தில் சேர மறுப்பவர், வேலை நிறுத்தஞ் செய்தவருக்குப் பதிலாக வேலைக்குச் செல்பவர், (வினை.) புண்வகையில் பொருக்கு வை, கருங்காலியாக நட.
Scabbard
n. வாளுறை, கத்தியுறை.
Scabbard-fish
n. ஓலைவாளை, வாளுறைபோல மின்னும் கடல்மீன் வகை.
Scabbed, scabby
சொறி பிடித்துள்ள, சிரங்கு நோய்க்கு ஆளான, இழிந்த, கொடிய, பயனற்ற.
Scabiious
n. பல்வகை வண்ணமுடைய காட்டுச்செடி வகை, (பெ.) சொறி சிரங்கு பிடித்துள்ள, பொருக்குகள் நிறைந்த.
Scabrous
a. (வில., தாவ.) சொரசொரப்பான மேற்பரப்புடைய, பொருக்குகள் நிறைந்த, மிகு திறம்படக் கையாளவேண்டிய, இதவுக்கேடான, மட்டுமதிப்புடன் கையாள முடியாத.
Scaffold
n. சாரக்கட்டு, கட்டிடமெழுப்பும் வேலையாட்கள் பயன்படுத்துவதற்குரிய அழிக்கட்டுமானம், பரண்கட்டு, வேட்டைக்காரர் தங்குமேடை, காட்சிமேடை, காட்சிப் பொருளுக்கான உயர் அழிச்சட்டமேடை, பார்வையாளர்க்கான மேடைக்கட்டு, ஆடரங்கமேடை, வேடிக்கை காட்டுபவர்களுக்கான, மேடைக்கூண்டு, தூக்குமேடை, கோக்கா மரம், நேராக ஆணைக் கொலைஞர் கையாலேயே பெறும் கொலைதண்டனை, பிணக்கூடு, முற்காலங்களில் இறந்த உடலை வைப்பதற்குரிய சட்டம், பிணவைப்புச் சட்டம், இறந்த வேட்டை விலங்குகளின் உடலை வைப்பதற்குரிய அழிக்கூடு, (உயி.) முற்சட்டக்கூடு, கரு, உயிரின் பின்வளர்ச்சிக்குரிய முற்படிவ அமைவு, கூண்டுச்சட்டம், (வினை.) கட்டிடத்திற்குச் சாரக்கட்டுமானம் அமை, மேடைச்சட்டமீது காட்சிக்கு வை, தூக்கிநிறுத்து, பேணிக்கா.
Scaffolding
n. சாரக்கட்டு அதல், சாரக்கட்டு, சாரக்கட்டுக்கு வேண்டும் பொருள்கள், ஓவியர் நிலைச்சட்டம், தூக்குமேடைக்குரிய பகுதிகள், காட்சிமேடை, பார்வையாளர் மேடைக்கட்டு, கூண்டுச்சட்டம், மேடைச்சட்டம் மீது காட்சி வைப்பு, தூக்கி நிறுத்தல், பணிகாப்பு.
Scaffolding-pole
n. சாரக்கம்பம், சாரக்கட்டைத் தாங்கும் மையத்தூண்.
Scaglia
n. இத்தாலிய சிவப்புச் சுண்ணக்கல்.
Scagliola
n. ஒப்பனைக்கற் போலியாகச்-செய்யப்படும் பசை நீற்றுக் கலவை வேலைப்பாடு.
Scalable
-2 a. எடைகோல் தட்டுகளில் வைத்து நிறுக்கத் தக்க.
Scalable
-3 a. ஏறிக்கடக்கத்தக்க, ஏணிவைத்து ஏறத்தக்க.
Scalable
-1 a. மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய, விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க, பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க, உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க, தோல்வகையில் உரியத்தக்க, உலோக வகையில் தகடுதகடாக வருகிற, தோல்வகையில் வங்கு உருவாகிற, சிம்புசிம்
Scalariform
a. (வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான, (தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற.
Scalawag
n. கறளை விலங்கு, போதிய வளர்ச்சி பெறாத உயிர், தீனியின்றி ஒட்டிக்குறுகிய விலங்கு, மூளையற்றவர், கவைக்குதவாதவர், கயவர், போக்கிரி.