English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Saw-pit
n. மர அறுப்புக் குழி.
Saw-set
n. இரம்ப நௌதவுக்கருவி, இரம்பப்பற்களை இருபக்கமுந் திருப்புவதற்கான கருவி.
Saw-wrack
n. இரம்பப்பற்களைப்போன்ற அமைப்புள்ள கடற்பூண்டுவகை.
Sawyer
n. மரம் அறுப்பவர், ஆற்றில் ஒதுக்கப்பட்ட மரம், மரத்தைத் துளைக்கும் முட்டைப்புழுவகை.
Sax
n. மோட்டுப் பாவுகல் வெட்டுகருவி.
Saxatile
a. (தாவ., உயி.) பாறைகளில் வாழ்கிற, பாறைகளிடையே வளர்கிற.
Saxe
n. நிழற்படத்தாள் வகை, நீலநிற வகை.
Saxhorn
n. (இசை.) பித்தளைத் துளைக்கருவி வகை.
Saxifrage
n. வௌளை அல்லது சிவப்பு மலர்களையுடைய பாறைச் செடிவகை.
Saxon
n. பிரிட்டனில் கி.பி.5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் படையெடுத்துவந்து குடியேறிய வட செர்மானிய இனஞ் சார்ந்தவர், பிரிட்டினில் குடியேறிய வட செர்மானிய இனங்களைச் சார்ந்தவர், பிரிட்டனில் குடியேறிய வட செர்மானியர் இனமொழி, வடக்கு செர்மானியிலுள்ள சாக்ஸன்இன மொழி, பண்டைய (கி.பி.1066க்கு முற்பட்ட) ஆங்கிலமொழி, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர், ஆங்கிலேயரின் மூதாதையர், ஆங்கில மொழி பேசுபவர், ஆங்கில இன மரபினர், தற்காலச் சாக்ஸனி நாட்டவர், ஆங்கிலமொழியின் செர்மானிய இனக்கூறு, (பெ.) பழங்கால ஆங்கிலமொழி சார்ந்த, ஆங்கிலேயரின் மூதாதையரினஞ் சார்ந்த, ஆங்கில மொழிமரபு சார்ந்த, ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் சார்ந்த,பழங்கால ஆங்கிலமொழியிலுள்ள.
Saxondom
n. ஆங்கில இனம் பரவியுள்ள உலகப்பகுதி, ஆங்கில மொழி பேசும உலகப்பகுதி.
Saxonism
n. தூய ஆங்கில மரபு, பழங்கால ஆங்கில மொழி மரபு, தூய ஆங்கிலப் பழக்க வழக்கங்களையே கைக்கொள்ளும் பான்மை.
Saxonist
n. பழங்கால ஆங்கில மொழிப் புலஹ்ர்.
Saxonize
v. ஆங்கில இனமரபு ஆக்கு, ஆங்கில இனமரபு மேற்கொள்.
Saxony
n. நேர்த்தியான கம்பளிவகை, நேர்த்தியான கம்பளித் துணிவகை.
Saxophone
n. (இசை.) கூடிசைக்குழுமக் கருவி.
Say
-1 n. கூற்று, கூறவேண்டுங் கருத்து, கூறவேண்டுவதைக்கூறுவதற்கான வாய்ப்பு, கருத்து முடிவில் பங்கு, (வினை.) சொல்லு, வாய்விட்டுரை, கருத்து வௌதயிடு, கருத்துக்கூறு, தெரிவி, கருத்தறிவி, ஓது, ஒப்புவி, எடுத்துரை, பேச்சுத்தொடர், குறிப்பிடு, குறித்துரை, உறுதியாகக் கூற
Say
-2 n. நேர்த்திக் கம்பளித்துணி வகை.
Sayid
n. இஸ்லாமிய வழக்கில் நபிநாயகத்தின் புதல்விபாதிமாவின் மரபினர்களில் ஒருவர்.