English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Savageness, savagery
பண்பாடற்ற நிலை, நாகரீகமற்ற நிலை, விலங்குத்தன்மை, காட்டுவிலங்குப்போக்கு, வெங்கொடுமை.
Savanna, savannah
மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வௌத.
Savate
n. பிரஞ்சுக் குத்துச்சண்டை வகை, கைமுட்டிமட்டுமன்றிக் காலந் தலையும் பயன்படுத்தப்படுங் குத்துச் சண்டை.
Save
n. கெலிப்புத்தடங்கல், பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை, (வினை.) காப்பாற்று, துன்பம் அகற்றியுதவு, தீங்கு நேராமல் தடு, அவமானம் வராமல் தடுத்துதவு, இடையூற்றினின்று தப்புவி, இடரிலிருந்து மீட்பி, சிறையினின்றும் விடுவி, பதனஞ்செய், சேமித்து வை, வைத்துப்பேணு, செலவு செய்யாமல் மீத்து வை, செலவினங்குறையச்செய், கையிறுக்கிச் செலவு செய், செட்டாயிரு, சிக்கனம் பேணு, வாராமல் தடு, தடுத்துக் கா, தேவையற்றதாக்க, செலவிலிருந்து காத்தமை, இழப்புத் தடுத்தமை, காலச்சிக்கனம் செய்துதவு, காத்தருள், மீட்பு அளி, கடைத்தேற்றம் வழங்கு, ஆன்மிக நன்னிலை அடைவி, பழி தடுத்தாளு, காலந்தவறாதிரு, இழவாதிரு, பெறுவதில் வெற்றிகாண், காத்து ஒதுக்கீடுசெய், முன்காப்புச் செய், காப்புவித அமை, பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு, தவிர, என்பதைத் தவிர, என்றில்லாவிட்டால், என்றில்லாமல்.
Save ones bail
குறிப்பிட்ட நாளில் தோன்று.
Save-all
n. ஏதொன்றும் வீணாகாமற் காக்கும் அமைவு, மெழுகுதிரி வீணழிவு காப்பமைவு, வீணழிவு காப்பமைவு, கஞ்சன், (பெ.) கஞ்சத்தனமான.
Saveloy
n. மசாலை இறைச்சி வகை.
Savin
n. மருந்து ஆவிநெய் தரும் இலைகளையுடைய மரவகை, மருந்து ஆவிநெய் தரம் தண்டு தழைகளையுடைய செடிவகை, மருந்தாவி நெய் தரும் தண்டிலை வகைகள்.
Saving
n. பாதுகாத்தல், ஏமாப்பு, சேமிப்பு, மிச்சம்பிடித்தல், சேமிப்புத்தொகை, பேணிவைப்பு, தடைகாப்பு, மீட்பு, (பெ.) பாதுகாக்கிற, காப்புச்செய்கிற, பேணுகிற, விடுவிக்கிற, மீட்கிற, விலக்களிக்கிற, (இறை.) வீடுபேறு எய்துவிக்கிற, செட்டான, சிக்கனமான, சேமித்து வைக்கிற, ஆதாயப் பேற்றினைவிட இழப்புத் தவிர்ப்பை நோக்கமாகக் கொண்ட, தவிர.
Savings-bank
n. சேமிப்புப் பொருளகம்.
Saviour
n. மீட்பர், இரட்சகர், நற்கதியளிப்பவர், மீட்பவர், நாடு முதலியவற்றை அழிவு முதலியவற்றினின்றுங் காப்பவர், விடுவிப்பவர்.
Savoir faire
n. கூர்விரைவு உணர்வுத்திறம், விரகு, சாமர்த்தியம்.
Savoir vivre
n. பாடறிவு, பழகுநயம்.
Savory
n. நறுமணப்பூண்டுவகை.
Savour
n. தனிச்சுவைத்திறம், தனி நறுமணக்கூறு, நினைவூட்டும் பண்புக்கூறு, இணைவுநய உணர்வுக்கூறு, ஐயப்பாட்டின் சாயல், சார்புத்தடம், (வினை.) சார்புச் சுவை நலமுடையதாயிரு, சார்பு மவ்ம் வீசு, சாயலுடையதாயிரு, சார்பு வாடைவீசு, சார்பான பண்புகளின் தடமுடையதாகவிளங்கு, தனிச்சுவைத்திறம் உடையதாயிரு, தனிமணங்கமழ்வுறு, சுவைமண நலம் உடையதாயிரு, சுவை-மணத்திறம் உடையதாயிரு, பண்புத்திறங் காட்டு, சார்புவாடைகாட்டு, சுவையூட்டு, சுவைபடு, கமழ், பண்புநயமுணர், சுவைநயமுணர், நுண்ணயச்சுவை காண், சுவைமணநலமூலம் உணர்ந்து நுப்ர்.
Savoury
n. காரச்சுவையுண்டி, உணவுக்கு முன்னோ பின்னோ பசி செரிமானமூக்கு முறையில் கொள்ளப்படும் உப்புறைப்பும் மணச்சுவையுங் கூடிய துணையுணவு, (பெ.) பசி சுவையூக்குஞ்சுவைமணமுடைய, உண்டிவகையில் உப்புச்சுவையுங்காரமுமுடைய, இனிப்பல்லாத, நறுமணச்சுவைநலம் வாய்ந்த, இடவகையில் கெடுவாடையற்ற, விருப்பத்தக்க நலமுடைய.