English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Satirist
n. வசையாளர், அங்கதக்கவிஞர், வசைப்பா எழுதுபவர், நையாண்டி செய்பவர்.
Satis
n. போதியது, போதுமான அளவு, (வினையடை.) போதியழ்ய்.
Satisfaction
n. மனநிறைவு, திருப்தி, அவா நிறைவேற்றுவது, திருப்தியளிப்பது, ஆவல் நிறைவேற்றுவது, தேவைதீர்வு, ஐயந்தீர்வு,தீர்வு செய்வது, தீர்வாளர், குறை நிறைவு, குறைநிறைவு செய்பவர், உணர்ச்சிக்கு உகந்தது, உணர்ச்சிக் கொந்தளிப்பு அமைவிப்பது, மல்லழைப்புக்குரிய மல்விடுப்புத்தீர்வு, செயல் வகையில் சரி எதிரீடு, பழிபாவ வகையில் கழுவாய், கழுவாய் போன்ற எதிர்மாற்றீடு, கழுவாய் நிலைத் தன்னொறுப்புமுறை, எதிரீடளிப்பு, இயேசுநாதர் வகையில் மனித இனத்தின் பாவங்களுக்கான பகரப்பரி கரிப்புச் செயல்.
Satisfactory
a. மனநிறைவளிக்கிற, தேவை நிறைவற்றத்தக்க, போதிய, விருப்பத்திற்கு ஒத்த, சரியீடு செய்யத்தக்க, தீர்வாகக் கருதக்கூடிய, ஏற்றக்கொள்ளத்தக்க, ஐயப்பாட்டிற்கு இடனற்ற, (இறை.) பாவத்திற்கு ஏற்ற கழுவாயான, கழுவாய் வகையில் பாவத்திற்கு ஏற்றதான.
Satisfy
v. மனநிறைவளி, திருப்பதிப்படுத்து, குறை நிறைவேற்று, கடன்தீர், தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய், கடமை நிறைவேற்று, போதுமான அளவு வழங்கு, போதுமானதாயிரு, விருப்பத்தை நிறைவுசெய், ஆவல்நீர், வேண்டுகோளை நிறைவேற்று, விருப்பத்திற்கு இசைய நடந்துகொள், விருப்பத்திற்கு ஏற்றதாயிரு, கருத்திற்கு ஏற்றதாயிரு, கருத்திற்கு ஒத்ததாயிரு, எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு, நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு, பண்புகளுக்கு ஒத்ததாயிரு, தகுதியுடையதாயரு, தகுதியுடையவராயிரு, உணர்ச்சிக்கு உகந்ததாயிரு, பசி-விடாய் அப்ற்று, ஐயம் அகற்று, எதிர்ப்பைச் சன்ளி, சரியீடுசெய், (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய், மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Satrangi
n. சமுக்காள வகை.
Satrap
n. ஆளுநர், மண்டல ஆட்சியாளர், பண்டைய பாரசிகப் பேரரசின் மாகாண ஆட்சித்தலைவர், மன்னர் பெயராளர், சிற்றரய்ர், புறமாகாண ஆட்சியாளர், குடியேற்ற நாட்டு ஆளுநர், ஆரவார அதிகாரி, ஓய்யார ஆட்சித் தலைவர், கொடுங்கோலாட்சித்தலைவர்.
Satsuma, Satsuma ware
n. ஜப்பானிய வெண்மஞ்சள் மட்பாண்டவகை.
Saturate
v. செறிவி, தோய்வி, கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி, காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு, பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து, பொருளில் மின்னாற்றலைச் செறிவி, உச்ச அளவில் ஓதஞ் செறியவை, வண்ண வகையில் திண்ணிறைவூட்டு, வௌளிடையகற்று, பண்புவகையில் ஊறித்ததும்புவி, மனத்தில் ஆழப் பதியவை, குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து, குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு.
Saturation
n. நிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை.
Saturn
n. பண்டைய ரோமர் வேளாண்மைத் தெய்வம், (வான்.) சனிக்கோள், (சோதி.) சனிக்கிரகம், மடிமை விளைவிப்பதாகக் கருதப்பட்ட கிரகம்.
Saturnalia, saturnalia
n. வேளாண்மைத் தெய்வத்திற்கு எடுத்த பண்டைய ரோமர் பெருவிழா, களியாட்ட வெறிக்கூத்து.
Saturnian
n. சனிக்கோளில் வாழ்பவராகக் கருதப்படுவர், கிளர்ச்சியற்ற மனப்பான்மை உடையவர், சனி இலக்கினத்தில் பிறந்தவர், ரோமர் வழக்கில் 'சனி'த் தெய்வத்தின் புதல்வனான ஜூப்பிட்டர்த் தெய்வம், (பெ.) சனிக்கோள் சார்ந்த, ரோமரின் வேளாண்மைத் தெய்வம் பற்றிய, இன்பமயமான, தூய்மை வாய்ந்த, பொய்ம்மையற்ற, மிகப்பழமை வாய்ந்த, பண்டை லத்தீன் யாப்புமுறை சார்ந்த.
Saturnic
a. ஈய நஞ்சிற்கு உள்ளான.
Saturnine
a. கிளர்ச்சியற்ற மனப்பாங்குடைய, மடிமையுடைய, மனச்சோர்வு காட்டுகிற, துயரார்ந்த தோற்றங்கொண்ட, ஈயஞ் சார்ந்த, ஈய நஞ்சினுக்கு உள்ளான.
Satyagraha
n. அறப்போர், சத்யாகிரகம்.
Satyr
n. வன தேவதை, கிரேக்க மரபில் குதிரைக்காதும் வாலும் மனித வடிவும் உடைய வனதெய்வக் குழுவினரில், ஒருவர், பாலைப்பேய், காமவெறிபிடித்த கயவன், மிருகத்தனமானவன், வாலில்லாக் குரங்குவகை.
Satyriasis
n. ஆண்கள் பால்வெறி.
Satyric, satyrical
குதிரைக்காலும் வாலும் உடைய கிரேக்க வனதெய்வங்களுக்குரிய.