English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Satanism
n. தீநெறிச் சேறல், கெடுநடவடிக்கை, பேய்த்தன்மை, பேயிறை வழிபாடு, பேய் வணக்கம், பேயிறை பண்பு போற்றல், ஷெல்லி-பைரன் போன்ற கவிஞர் குழுவினரின் பண்பு.
Satanology
n. பேயிறை நம்பிக்கை, பேய் நம்பிக்கை, பேயிறை நம்பிக்கை சார்ந்த கருத்துத்திரட்டு, பேயிறை நம்பிக்கை சார்ந்த வரலாறு.
Satara
n. கிடைக் கோடுகளையுடைய ஆடவர் ஆடைக்குரிய கனத்த கம்பளித்துணி வகை.
Satchel
n. புத்தகப் பை, பள்ளிக்கூடப் பை.
Sate
v. மனநிறைவூட்டு, தெவிட்டு.
Satellite
n. துணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான.
Satiate
a. தெவிட்டுநிலையுடைய, தெவிட்டிவிட்ட, (வினை.) மனநிறைவூட்டு, தெவிட்டு.
Satiety
n. தெவிட்டிய நிலை, சலிப்பு.
Satin
n. ஒண்பட்டுத்துகில், பளபளப்பு பட்டுத் துணிவகை, (பெ.) வழவழப்பான, பளபளப்பான, (வினை.) தாளக்கு வழவழப்பான மேற்பரப்புக் கொடு.
Satin-bird, satin bower-bird
n. கருநீலத் தோட்டப் பறவை வகை.
Satinet, satinette
ஒண்பட்டுத்துகில் வகை.
Satin-flower
n. ஊதா மலர்வகை.
Satin-spar
n. நாரியற் சுண்ணகக் கரியகை.
Satin-stitch
n. பூவேலைத் தையல் வகை.
Satin-straw
n. தொப்பிற்குரிய வைக்கோல் வகை.
Satin-wood
n. முதிரை மரம், மென்மரம்.
Satire
n. வசைச் செய்யுள், அங்கதம், சமுதாயக்கேடு-கோளாறுகளின் சீர்திருத்த நோக்கங்கொண்ட நையாண்டித்தாக்குதல், பேச்சில் கேலித்தாக்குதல், வசைத்திறம், வசைத்திற ஆட்சி, வசைத்தாக்கு மனப்பான்மை, வசைத்தாக்குமுறை, பழிப்பு.
Satiric
a. அங்கதஞ் சார்ந்த, வசை இலக்கியத்திற்குரிய, வசை எழுதுகிற, வசைத்தாக்குதல் செய்கிற,பழிப்பான, குறை காணும் இயல்புடைய, வஞ்சப் புகழ்ச்சியான, நகைத்திறத்துடன் குற்றங்காணும் இயல்புடைய.
Satirical
a. வசைமுறையான, வஞ்சப்புகழ்ச்சியான.