English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sauce
n. ஆணம், தாளிதக்கூட்டு, சுவைதருங் கூட்டுச்சாறு, சுவைப்பொருள், குறும்புத்தனம், துடுக்குத்தனம், துடுக்குப்பேச்சு, (வினை.) ஆணத்தாற் சுவைப்படுத்து, சுவைபெருக்கு, காரசாரமாக்கு, துடுக்குத்தனங்காட்டு.
Sauce-alone
n. சுவைக்கூட்டில் பயன்படும் மணப்பூண்டு வகை.
Sauce-boat
n. சுவைக்கூட்டு வைப்பதற்கான படகுவடிவக்கலம்.
Saucebox
n. திமிர் கொண்டவர், துடுக்குத்தனமுடையவர்.
Saucepan
n. நீளக் கைப்பிடியுடைய உலோக வேவுகலம்.
Saucepan-fish
n. அரச நண்டு.
Saucer
n. ஏந்துதட்டு, தொட்டிச் சூழ்தட்டு, பூந்தொட்டிகளில் ஊற்றும் நீர் உடனே ஒடிவிடாமலிருக்கத் தொட்டியின் அடியில் வைக்கபடுந் தட்டு, குவிவாழமற்ற தட்டம்.
Saucy
a. துடுக்கான, சுறுசுறுப்பான, கீழ்ப்படிதலற்ற.
Sauerkraut
n. செர்மன் ஊறுகாய் வகை.
Saumur
n. வெண்ணிறக் கொடிமுந்திரித் தேறல் வகை.
Saunter
n. திரிதரல், (வினை.) சுற்றித்திரி.
Sauriian
n. பல்லிப் பேரினம், பல்லி-முதலை-மரபற்றுப்போன முற்காலப் பெருவிலங்குகள் முதலியவற்றை உள்ளடக்கிய ஊர்வனவற்றின் உயிர்ப்பேரினம், (பெ.) பல்லிப் பேரினஞ் சார்ந்த.
Saury
n. நீண்ட அலகு மீன்வகை.
Sausage
n. மசாலை இறைச்சி, கொத்திறைச்சிக் குழலப்பவகை, கொத்திறைச்சிக் குழலப்பப் பாளம்.
Sausage-filler, sausage-grinder, sausage-machine
n. கொத்திறைச்சிக் குழலப்பக் கருவி.
Sausage-roll
n. இறைச்சி மாவடை, கறியை மாவினள் வைத்துப் பக்குவஞ் செய்யப்பட்ட பொதியப்பம்.
Saute
a. வாணலியிலிட்டு வரட்டப்பட்ட.
Sauterne
n. பிரஞ்சு வெண்ணிற இன்தேறல் வகை.
Sauve-qui-peut
n. (பிர.) பல திசைச் சிதறல்.
Savage
n. காட்டுமிராண்டி, நாகரிகத் தடமற்றவர், வேட்டைநிலை வாழ்க்கையில் உள்ளவர், வெங்கொடியர், கடுமுரடர், திருந்தாதவர், (பெ.) நாகரிகத் தடமற்ற, காட்டு மிராண்டித்தனமான, பண்பாடற்ற, திருந்தாத, கொடூரமான, கொடிய, (வினை.) குதிரை வகையில் தாக்கிக்கடி, குதிரை வகையில் கீழே தள்ளி மிதித்துத் துவை.