English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Triune
n. மூன்றொன்றானமை, (பெயரடை) மூன்றொன்றான.
Trivalent
a. (வேதி) மூவிணை திறமுடைய, மூன்று அணுக்களடன் இணையும் இயல்புகொண்ட.
Trivet
n. அடுப்படிக் கோக்காலி, சமையற் கலந்தாங்கி, முக்கவர்த் தாங்குசட்டம்.
Trivial
a. மிகச் சிறுதிறமான, நொய்தன் நொய்தனா, சாரமற்ற, மிகப் பொது நிலைப்பட்ட, பழகிச்சலிப்பூட்.டுகிற.
Triviality
n. சிறப்பில் பண்பு, சாதாரணம்.
Trivialize
v. மிக அற்பமாகக் கருது.
Trivializm
n. மிகச் சிறு செய்தி, அற்பக் கருத்துரை.
Tri-weedly, n.,
முக்கிழமை வௌதயீடு.
Troat
n. மதமான் குரல், இணைவிழைச்சுப் பருவக் கலைமானின் கரைவு, (வினை) கரப்பொலி கொடு, கலைமான் வகையில் இணைவிழைச்சுப் பருவக் கரைவு எழுப்பு.
Troblous
a. (பழ) தொல்லை நிறைந்த, கிளர்ச்சிகளுக்குரிய, அலைவுற்ற, கலக்கமுற்ற.
Trocar
n. (மரு) நீரெடுப்புக்கருவி, மகோதரம் போன்ற நீர் நாய் வகையில் உடலிலிருந்து நீர் எடுக்க உதவிய முற்கால மருத்துவக் கருவி.
Trochaic
n. நெடில் குறில் ஈரசைச் சீர் யாப்புச் செய்யுள், (பெயரடை) நெடில் குறில் ஈரசையாலான, நெடில் குறில் ஈரசைச் சீராலரான, நெடில் குறில் ஈரசைச்சீரடி யாப்பாலான.
Trochee
n. பண்டை லத்தீன-கிரேக்க மொழி வழக்கில் நெடில் குறில் ஈரசைச்சீர், ஆங்கில மொழி வழக்கில் அழுத்த அசை அழுத்தமில் அசை ஆகிய ஈரசைச் சீர்.
Trochil, trouchilus
n. குருவி வகை, முரலுஞ் சிறு புள் வகை, முதலைப் பற்களைப் பொறுக்குவதாகப் பண்டு குறிக்கப்பெற்ற பறவை வகை.
Trochoidal
a. இம்பரச்சங்கு வடிவான.
Trochometer
n. ஊர்திச் செலவுச் தொலைமானி.
Trod
v. 'ட்ரெட்' என்பதன் இறந்த காலம், முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Trodden
-1 a. மிதிபட்ட, மேல் மிதித்து நடந்த, காலரைபட்ட.
Trodden
-2 v. 'ட்ரெட்' என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.