English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trophic
a. நரம்பு வகையில் உணவூட்டஞ் சார்ந்த.
Trophied
a. வெற்றிநினைவுச் சின்னம் பதித்து வைக்கப்பட்ட, வெற்றிச் சின்னம் வழங்கப்பட்ட, பரிசில் வழங்கப்பட்ட.
Trophneurosis
n. நரம்புக் கோளாறினால் ஏற்படுஞ் செமிப்புக்குறைவு.
Trophy
n. வெற்றிச்சின்னம், வாகைப்பூ, வாகைப்பதக்கம், வெற்றி நினைவுக் கட்டுமானம், வெற்றிநினைவுத் தூண், வெற்றி நினைவுமாடம், வெற்றிநினைவுக்குறி, வெற்றித்திறை, பரிசிற்பொருள், (வினை) வெற்றி நினைவுச்சின்னம் பதித்துவை, வெற்று நினைவுச்சின்னமாக்கு, பரிசில் வழங்கு.
Tropic
n. வெப்பமண்டல எல்லைக்கோடு, நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே 23 பாகை 2ஹ் கலை தொலைவில் நிலவுலகைச்ட சுற்றியுள்டள வட்டக்கோடு, (பெயரடை) வெப்பமண்டலப் பகுதிக்கேயுரிய, வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற.
Tropical
a. நிலவுலக வெப்பமண்டலப் பகுதி சார்ந்த, வெப்ப மண்டலப் பகுதிக்கேயுரிய, வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற.
Tropicopolitan
n. வெப்பமண்டலத்தில் வாழும் உயிர் வகை, வெப்ப மண்டலத்தில் வளருந் தாவர வகை.
Tropics
n. pl. நிலவுலக வெப்பமண்டலப்பகுதி.
Tropology
n. உருவக வழக்கு விளக்கம்,
Tropopause
n. சேணிடை, வளிமண்டிலதம்திற்கும் மீவளி மண்டிலத்திற்கும இடைப்பட்ட சிற்றிடை அடுக்கு.
Troposphere
n. அடிவிளமண்டலம்.
Troppo
adv. ஓரளவு மிக்கதாக.
Trot
n. தவ்வுநடை, துள்ளுநடை, குதிரையின் கெச்சைநடை, கெச்சைநடை உஷ், சிறுதொலைக் கெச்சைநடை, தவ்வுநடைப்பயிற்சி, தவ்வுநடைவேகம், வேலைவகையில் தவ்வுவேகம், இடைவிடா விரை போக்குவரவு, தொடர் சுறுசுறுப்பு நடவடிக்கை, தத்துநடைக்குழந்தை, (வினை) தவ்வு நடைபோடு, குதிரை வகையில் கெச்சைநடை போடு, குதிரையைத் தவ்வுநடைபோடுவி, ஆள்வகையில் மட்டான விரை ஓட்டமிட்டுச் செல், மட்டமான விறுவிறுப்புடன் நடவடிக்கையில் ஈடுபடு, பகட்டாகச் செய்துகாட்டி வீறாப்படை.
Troth
n. மெய்யுறுதி, உரை வாய்மை, (வினையடை) மெய்யாக.
Trotter
n. தவ்வு நடையர், தவ்வு நடையிடுவது, கெச்சை நடைக் குதிரை.
Trotters
n.pl. (வேதி) ஆற்றல்மிக்க வெடிமருந்து.
Troubadour
n. யாழ்ப்பாணர், பிரெஞ்சுநாட்டுப் பிரவென்சு பகுதியிலிருந்து தொடடிங்கி மேலே ஐரோப்பா வெங்கும் பதினோராம் நுற்றாண்டில் பரவி இயங்கிய நாடோ டி இசைப் பாடகர்.
Trouble
n. குழப்பம், தொந்தரவு, தொல்லை, அலைக்கழிப்பு, மனக்கலக்கம், சிறு மனக்கசப்பு, நோய்ப்பீடிப்பு, நோய், இடர்ப்பாடு, துயர்க்காரணம், (சுரங்) சிறு கோளாறு,. சிறு தொல்லை, (வினை) தொல்லைப்படுத்து, தொந்தரவு செய், கவலையூட்டு, கவலைப்படுத்து, கவலைப்படு, கடு முயற்சி மேற்கொள்ளுவி, கடுமுயற்சி மேற்கொள், உள்ளத்தை அலைக்கழிவுறுத்து, கலக்கு.
Trouble-shooter
n. (பே-வ) இயந்திரக் கண்காணி, இயந்திரக் கோளாறறு கண்டுதிருத்தும் பணியாளர், தொழில்துறை வழக்குநடுவர்,
Troublesomeness
n. தொந்தரவு, தொல்லை.