English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tufter
n. மானைப் பிதிவிடத்திலிருந்து கலைக்கப் பயன்படும் வேட்டை நாய்.
Tuft-hunting
n. பட்டம் பதவித் தோழமைத் தேட்டம், பட்டம் பதவி படைத்தோர் கூடடுறவுத்தேட்டப் பழக்கம், (பெயரடை) பட்டம் பதவியாளர் தோழமை நாடுகிற.
Tufty
a. (உள்)குஞ்சமார்ந்த, முனைமுடி வாய்ந்த.
Tug
n. பற்றியிழுப்பு, வெட்டியிழுப்பு, வலிப்பிழுப்பு,.இழுவை, இழுப்பு நீராவிப்படகு, குதிரைச்சேணக் கொளுவி வார், (சுரங்) கப்பிக் கொளுவிர, (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர், (வினை) வலித்திழு, ஊக்குடன் பற்றி இழு, நீராவிப் படகின் ஆற்றலால் இழு,
Tug-boat
n. இழுவை நீராவிப் படகு, இழுவைக் கப்பல்.
Tugger
n. வலிந்திழுப்பவர்.
Tugging
n. வலிந்திழுத்தல், கடுமுயற்சி, (பெயரடை) வலிந்திழுக்கிற, கடுமுயற்சி வாய்ந்த.
Tuism
n. முன்னிலைப்பாடு, முன்னிலைப்படுத்திக் கூறும் இலக்கியப் பாணி, பிறர் நல அக்கறை, பிறர் நலச் சார்பு.
Tuition
n. போதனை, தனிப்போதனை, தனிப்போதனைப் பணி, தனிப்போதனைக் கட்டணம்.
Tuition centre
தனிப்பயிற்சி நிலையம்
Tula
n. வௌவரி மை, வௌளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புதற்கான கருங்கலவைப் பொருள், வௌவரிடிக்கோலம், வௌவரிக் கோலப் பாணி, வௌளிச் செதுக்கிற் கரு வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பாணி.
Tulchan,. Tulchin
உறைக்கன்று, போலிக்கன்று.
Tulip
n. மணிவடிவ மலர்ச்செடி வகை.
Tulipomania
n. மணிமலர் ஆர்வக்கோட்டி.
Tulip-root
n. புல்லரிசிப் பயிர்நோய் வகை, புல்லரிசிப் பயிர்த் தண்டுவீக்கம்.,
Tulle
n. மென்பட்டு வலைத்துகில் ஆடை.
Tulwar
n. வாள், கொடுவாள்.
Tum
n. நரப்பிசை ஒலிக்குறிப்பு.
Tumble
n. தரக்கி வீழ்வு, தடுமாற்றம்,. குட்டிக்கரணம, கலைமறிவு வீழ்வு, கழைத்கூத்து, வேடிக்கை, குழப்பநிலை, தலைகாலறியாத் தடுமாற்ற நிலை, குளறுபடி, (வினை) திடுமென விழு, உருண்டு விழு,. மறிந்து விழு,. குப்புற விழு,. உருளு, சுழன்று செல், தட்டுத்தடுமாறிச் செல், உருண்டு புரண்டு செல், விழுந்தெழுந்து, செல், தலைக்குப்புற விழு, தலைகீழாக்கு, இழுத்துத்தள்ளு, கீழே தள்ளு, சீர்குலை, குட்டிக் கரணமிடு, கழைக்கூத்தாட்டம் ஆடு, பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு, வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு, மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு, (இழி) படுக்கச் செல், (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
Tumble-bug
n. சாணத்தில் வளரும் வண்டுவகை.