English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Therout
adv. அதிலிருந்து வௌதயே.
Thesaurus
n. பொருளியைபுச் சொற்களஞ்சியம்.
These, pron. Pl.
இவர்கள், இவை, (பெயரடை) பலர் குறித்த வழக்கில் இந்த, பல குறித்த வழக்கில் இந்த.
Thesis
n. புனைவுகோள், பொருள்விளக்கக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, உடன்பாட்டு முற்கோள், ஆங்கில அலகீட்டில் அழுத்தம்பெறா அசை.
Thespian
n. நடிகர், நடிக, (பெயரடை) துன்பியல் முடிவுடைய, கி.மூ. ஆறாம் நுற்றாண்டிலிருந்தவராகக் கருதப்பட்ட தெஸ்பஸ் என்ற கிரேக்க நாடகக் கவுஞரைச் சார்ந்த.
Theurgy
n. சித்து, மனிதர் வாழ்க்கையில் இயல்மீறிய செயலாண்மை, மாயவித்தைக் கலை, மனித இயல்கடந்த மாந்திரீகம்.
Thew
n. தசைநார், நெஞ்சுரம், அறமுறைத்திட்பம், நேர்மையுணர்வுறுதி.
Thewed
a. கட்டுறுதி வாய்ந்த, முறுகிய தசைநாணுறுதி வாய்ந்த.
Thewy
a. தசைமுறுக்குடைய, வலிமை வாய்ந்த.
They, pron. Pl.
அவர்கள், அவைகள்.
Thick
n. திட்பக்கூறு, பொருளின் திண்மைமிக்க பகுதி, நெருக்கடிக் கட்டம், போர்வகையில் நெருங்கிய கைகலப்பிடம், (பே-வ) முட்டாள், (இழி) கொக்கோ, (பெயரடை) கெட்டியான, தடிப்பான, திண்மையான, திண்ணிய கோடுகளையுடைய, நெருக்கமாக வரிசைப்படுத்தப்பெற்ற, ஒருங்கு குவிக்கப்பெற்ற, பேரெண்ணிக்கையான, நிரம்பிய, நெருக்கமான, இடையீடின்றி இறுக்கமான, கலங்கலான, கூழான, மங்கலான, தௌதவற்ற, அழகற்ற, முட்டாள்தனமான, மந்தமான, குரல் வகையில் கம்மிய, தௌதவற்ற, நெருங்கிய நட்புடைய, (வினையடை) திண்ணிதாக, நெருக்கமாக, அடர்த்தியாக, அடுத்தடுத்து, வேகமாக, ஆழமாக, ஆழமாக, நெடுந்தொலை ஆழ்ந்து.
Thicken
v. கெட்டிப்படுத்து, கெட்டியாகு, வரவரச் சிக்கலாகு.
Thickening
n. கெட்டிப்படுதல், (பெயரடை) வரவர அடர்த்தியாகிற.
Thick-eyed
a. பார்வை மங்கலான.
Thickhead
n. மரமண்டையர், முட்டாள்.
Thick-headed
a. மரமண்டையான, முட்டாளான.
Thickly
adv. திண்மையாக, கெட்டியாக, நெருக்கமாக.
Thickness, n.l
திண்மை, கனம், திண்ண அளவு, தடிப்பு, குறித்த அளவு கடினப்பொருள்.
Thickset
n. தடித்த கருநிற மணித்துவாலைத் துணி, புதர்க்காடு, (பெயரடை) நெருங்கி வளர்ந்த, திடமாகக் கட்டப்பட்ட, நெருக்கமாகக் கட்டமைக்கப்பட்ட, கட்டமைப்பான, உடல் வகையில் திண்ணுறுதி வாய்ந்த.