English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thimbleful
n. சிமிழ் அளவு, சாராய வகையில் மிகச் சிறிதான அளவு.
Thimble-rig
n. கையடக்க விளையாட்டு வகை, மூன்று சிமிழ்களில் பயறு அல்லது சிறுபொருள் ஔதத்து வௌதப்படுத்துவதாகக் காட்டுங் கண்கட்டு வித்தை.
Thimble-rigger
n. கையடக்க விளையாட்டாளர், கண்கட்டு வித்தையாளர்.
Thin
n. நொய்ம்மை, (பெயரடை) மெல்லிய, மெலிவான, திண்ணிதல்லாத, மெலிதான, தாள்போன்றள, கனமற்ற, ஆழமற்ற, மெலிந்த, ஒடுங்கிய, ஒல்லியான, ஒடிசஷ்ன, கம்பி போன்ற, இழை வடிவான, நெருக்கமற்ற, நொய்தான, இறுக்கமற்ற, இடையிடைத் தளர்வான, இடையீடு மிகுதியான, தளர்த்தியான, உள்ளீடில்லாத, உறுதியற்ற, கெட்டியல்லாத, அகற்றக்கூடிய, வறிதான, பளிங்குபோன்ற, வரிகள் வகையில் இழைபோன்ற, எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய, கணகணஒலி வாய்ந்த, மெல்லொலி வாய்ந்த, (இழி) இசைவுக் கேடான, (இழி) மனத்திற்குப் பிடிக்காத, (வினை) மெல்லிதாக்கு, மெல்லிதாகு, வரவர மெல்லிதாகு, தேய்வுற்று மெலி, அளவிற் குறைவி, அளவிற்குறைவுறு, அடர்த்தி குறைவி, தளர்வுறு, தொகையிற் குறைவுறுத்து, எண்ணிக்கையிற் குறைவுறு, வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு, உடல் மெலிவுறுத்து, உடல் மெலிவுறு, (வினையடை)மெல்லியதாக, நொய்தாக, அல்ர்த்தியின்றி, எண் குறைவாக.
Thine
pron உன்னுடையது, உன்னுடையவர், உன்னுடையன, உன்னுடையவர்கள்.
Thing
n. பொருள், சாதனம், காரியம், செய்தி, உயிரற்றது, இழிந்தவர், இழிவிலங்கு, இழிபொருள், அற்பம், பொருட்படுத்த வேண்டாத செய்தி.
Thingamy
n. எவரோ ஒருவர், பெயர் தெரியாதவர், பெயர் மறந்து குறிப்பிடவேண்டிய ஆள்.
Thinghood
n. பொருளாந்தன்மை, பொருண்மை, மெய்ப்பொருள் தன்மை.
Thinginess
n. பொருண்மை, பொருளின் மெய்ம்மை, பொருளின் மெய்யுரு, பொருளின் மெய்ப்பண்பு, பிழம்பியல் பொருண்மை, உலகியல் மனப்பாங்கு, உலோகாயத மனநிலை, பொருளியல் வாத மனப்பான்மை.
Thing-in-itself
n. பொருளின் மெய்ப்பொருண்மை நிலை.
Thingness
n. மெய்ம்மை, புறப்பொருள் தன்மை, புலனறி மெய்ம்மை, பொருண்மை.
Thingy
a. மெய்யான, திடமான அறியக்கூடிய, கண்கூடான, அனுபவசித்தமான, புற வாய்மையுடைய, மெய்ந் நிகழ்வான.
Think
n. எண்ணம், (பே-வ) நினைப்புவீச்சு, (வினை) நினை, உன்னு, திடுமென மனங்கொள், திடுமெனக் கருத்துக் கொள், எண்ணு, எண்ணிக்கொண்டிரு, கருது, கருத்துடையவராயிரு, அபிப்பிராயப்படு, கருத்தாகக் கொள், கருத்துருவாக்கிக் காண், தனிக்கருத்துடையவராயிரு, மதித்துணர், மதிப்பிட்டு முடிவுசெய், கருத்தில்மதிப்பிட்டுக்காண், மதித்து முடிவுசெய், இசைவுடன் கருது, இசைந்து ஒப்புக்கொள், நம்பு, எதிர்பார், எதிர்நோக்கு, ஆவலுடன் எண்ணு, அரைகுறையாக விரும்பு, விரும்பி நினை, எண்ணிப்பார், நினைத்துப்பார்., செய்தி குறித்து நினை, புனை, மனத்தில் பாவித்து நோக்கு, கற்பனை செய்து காண், ஆய், சிந்தி, ஆழ்ந்து ஆராய், ஆழ்ந்து நினை, நினைவிலாழ், மனப்பயிற்சி செய், குறித்து ஆயள்வாராய்வு செய், எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு, திட்டஞ் செய், அவாவித் திட்டமிடு, முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார், சாவதானமாக ஆலோசனை செய், நினைவாற்றலால் விளைவித்துக்கொள்.
Thinker
n. கருத்தாளர், சிந்தனையாளர்.
Thinking
n. ஆய்வாராய்வு, சிந்தனை, (பெயரடை) எண்ணுகிற, சிந்திக்கிற.
Thinness
n. மெல்லிய தன்மை, தாள்போன்ற தன்மை, மெலிவு, நொய்ம்மை, அடர்த்தியின்மை, எண்ணிக்கைக் குறைவு.
Thinnish
a. சற்றே மெல்லிதான.
Thio-acid
n. ஊடுகந்தகத் திராவகம், உயிரகத்தின் இடமாகக் கந்தகம் இடம்பெறும் காடிவகை.