English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thiophene
n. நீர்ம மருந்துப்பொருள், திராவக வகை.
Third
n. மூன்றாவது, மூன்றன் கூறு, மூன்றில் ஒன்று, மூன்றாமவர், அயலார், தொடர்பற்றவர், கால அளவையில் நொடியில் அறுபதின் கூறு, தற்பரை இடை, கோண அளவையில் விகலையில் அறுபதின் கூறு,. குழிப்பந்தாட்ட வகையில் பதினெட்டுக் குழிகளிடையே ஆறுகுழி தாண்டியபின் ஏற்படுந் தடடுங்கல், (இசை) மூவிடை, ஈரரைச்சுர இடையீடு, (இசை) மூவிடைச்சுரம், மூவிடையாளாவிய இணையரைச் சுரம், (சட்) கைம்பெண் உரிமை வகையில் கணவன் தனிச் சொத்தில் மூன்றன் கூறு, (பெயரடை) மூன்றாவதான, மூன்றில் ஒரு கூறான, மூன்றாம்படியான, கீழ்த்தரமான, மூன்றாம் முறைமையுடைய, அயலான, தொடர்பற்ற, (வினை) மூன்றாம் வகு, பின்வழிமொழி, வழிமொழிபவருக்குப் பின் மூன்றாவராக ஆதரித்துப் பேசு, மூன்றாமவராக ஆதரவுசெய், மேலாதரவு செய், (வினையடை) மூன்றாவதாக.
Third-hand
a. இரண்டு கை கடந்துவந்த, மூன்றாம் படியான, இரவலுக்கு மேல் இரவலான.
Thirding
n. மூன்றில் ஒருபகுதி.
Third-party
a. மூன்றாவதாள் சார்ந்த, பயண முதலிய துறைகளில் உல்ன் தொடர்பாளர் இருவருமல்லாத முன்றாவது ஆளுக்குரிய தொடர்பற்ற உடனிலையாளருக்குரிய, உடனிலை அயலாருக்குரிய, உடனிலைக் காட்சியாளர்க்குரிய.
Third-rate
a. மூன்றாந்தரமான, மூன்றாம்படியான, தாழ்ந்த, கீழ்நிலையான.
Third-rpogramme
a. பிர்ட்டிஷ் வானொலியின் மூன்றாவது சிறப்பியல் திட்டத்திற்குரிய, நுண்ணறிவு சார்ந்த.
Thirsriness
n. விடாய், வரட்சி.
Thirst
n. விடாய், நீர் வேட்கை, மிகு விருப்பம், வேணவா, (வினை) விடாயுறு, நீர்வேட்கை கொள், வேணவாக்கொள், விரும்பி ஏங்குறு, அஷ்ப்புக்கொள், ஏக்கங்கொள்.
Thirstful
a. விடாயுடைய, வேட்கைமிக்க, வேணவா மிகளம் உடைய.
Thirstily
adv. விடாயுடன், தாகமாய், வேணவாயுடன்.
Thirstless
a. விடாயற்ற, நீர்வேட்கையற்ற, வேணவா வற்ற, காய்வற்ற, வறட்சியற்ற.
Thirsty
a. விடாய்கொண்ட, நீர்வேட்கையினையுடைய வேணவாக்கொண்ட, குடி விருப்புள்ள, காய்வுடைய, நாடு நிலம் அல்லது பருவ வகையில் வறட்சியான, (பே-வ) தாகம் உண்டுபண்ணுகிற, விடாய் தருகிற.
Thirteenth
n. பதின்மூன்றாவது, பதின்மூன்றாமவர், பதின் மூன்றில் ஒரு பங்கு, (பெயரடை) பதின்மூன்றாவதான, பதின்மூன்றில் ஒரு கூறான.
Thirtieth
n. முப்பதாவது, முப்பதாமவர், முப்பதில் ஒரு கூறு, (பெயரடை) முப்பதாவதான, முப்பதில் ஒரு கூறான.
Thirty
n. முப்பது, (பெயரடை) முப்பதான, முப்பது எண்ணிக்கையினையுடைய.
Thirtyfold
n. முப்பதின் மடங்கு, (பெயரடை) முப்பதின் மடங்கான, (வினையடை) முப்பதின் மடங்காக.
Thirty-two-mo
n. முப்பானிருமடி ஏடு, முப்பதிரண்டு தாள்கள் அல்லது அறுபத்துநான்கு பக்கங்கள் வருமாறு மடித்த தாள் மடியாலான ஏடு, (பெயரடை) முப்பதிரண்டு தாள் வருமாறு மடித்த.