English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
This
pron இது, இந்த ஆள், (பெயரடை) இந்த.
Thisness
n. இது எனுந் தன்மை, பொருளின் தனித்தன்மை, கால இடத் தனிச்சுட்டுத்தன்மை, பொருள் வேறுபாட்டுத் தன்மை.
Thistle
n. வண்ணமலருடைய முட்செடிவகை, ஸ்காத்லாந்து தேசீய இலச்சினை.
Thistle-down
n. வண்ணமலர் முட்செடி வகையின் பற்ககுந்துய்விதை.
Thistly
a. வண்ணமலர் முட்செடிவகை சார்ந்த, முட்செடி வகை போன்ற.
Thither
a. அப்பாலான, மறுபுறமான, (வினையடை) அவ்விடத்திற்கு, அங்கே, அதற்காக, அம்முடிவு நோக்கி, அதற்காக வேண்டி, அதை நாடி.
Thitherward, thitherwrds
adv. அவ்விடம் நோக்கி, அவண் நாடி.
Thole
-1 n. மிண்டுக்குழி, படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்புவிசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி, மிண்டுக் குவடு, துடுப்பு நெம்புவிசைக் குவடுகள் இரண்டில் ஒன்று.
Thole
-2 v. (பழ) அனுபவி, தாங்கு, பொறு, படு, (அரு) இணங்கு, இசைவு வழங்கு.
Thomism
n. தாமஸ் அக்வினாஸ் என்ற இடைநிலைக்காலக் கிறித்தவ இறையியல் வாத மெய்விளக்க அறிஞரின் கோட்பாடு.
Thomography
n. ஊடுகதிர் உள்தளப் படமுறை.
Thong
n. தோல் வார், தோல்வார்ச் சவுக்கு, கடிவாள வார், தூக்கின் நாண் வார், (வினை) தோல்வாரினால் விளாசு, தோல்வார் பொருத்து.
Thor
n. ஸ்காண்டிநேவிய மரபில் போருக்கும் உழவுக்கும் உரிய இடிமின்னல் தெய்வம்.
Thoracic
a. நெஞ்சுக்கூடு சார்ந்த, மனித வகையில் மார்புக் கூடு சார்ந்த, பூச்சியின வகையில் காற்சிறகு தாங்கும் இடையுடற் பகுதி சார்ந்த.
Thorax
n. (உள், வில) நெஞ்சுக்கூடு, மனித உடல் வகையில் மார்புக்கூடு, பூச்சியின வகையில் காற்சிறகுகள் கொண்ட நடு உடற்பகுதிங, மார்புக் கவசம்.
Thorite
n. கருமணிக்கட்டி, நார்வேயில் கிடைக்கும் கருங்கனிப்பொருள் வகை.
Thorium
n. தோரியம், சுடரொளி விளக்குகளின் வலைக்கப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம்.
Thorn
n. முள், முட்செடி, முட்செடி வகை, விலங்கின் எலும்புமுள், குத்தும் பொருள், குத்தும் பகுதி, 'த' ஒலியுடைய முற்கால ஆங்கில-ஸ்காண்டினேவிய மொழி எழுத்து.
Thornback
n. முதுகிற் கொடுக்குடைய உடுவடிவக் கடலுயிர் வகை.