English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thorniness
n. முள்போன்ற தன்மை, முள்ளுடைமை, முள் நிரம்பிய தன்மை.
Thornnill
n. முரலும் பறவை வகை.
Thornset
a. முள்ளடர்ந்த, முள்நிறைந்த, முட்கள் வாய்ந்த.
Thorntail
n. முரலும் பறவை வகை.
Thorny
a. முள்ளார்ந்த, முள்நிரம்பிய, முள்போன்ற, தொல்லை கொடுக்கிற, ஓயாத் தொந்தரவான.
Thoron
n. (வேதி) தோரியம் சிதைவில் வௌதயிடும் கதிரியக்க வளி.
Thorough
n. ஊடுவழி, இடைகழி, (வர) கட்டொறுப்புமுறை, முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை, (பெயரடை) முழுதூடளாவிய, சிறபொட்டுகும் இடை இடம்விடாத, முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற, நிறை முழுமை வாய்ந்த, வழுவா விடாமுயற்சியுடைய, அறு தீர்வான, இழைவிடாப்பிடியான, கடுங் கண்டிப்பான, மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத, ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத, கடுங் கட்டிறுக்கமான.
Thorough-bass
n. தீர்விறுதி முழங்கிசை, இசைமான எண்குறிகளுடன் முழு உச்ச ஆண்குரல் ஆண்குரல் இசைப்பகுதி, இசைமான எண்குறித் திட்டம், (பே-வ) ஒத்தியைபிசை.
Thorough-brace
n. வில்வார்ப்பட்டை, ஊர்திகளின் சுருள் வில்கட்கு இடையேயான பட்டைவார்.
Thoroughbred
n. உயர்தரப் பயிற்சியின விலங்கு, சாதிக்குதிரை, உச்சநிலைப் பயிற்சியினக் குதிரை, தளரா ஊக்கமும் அடக்கமுடியா ஆர்வ வெறியும் உடைய குதிரை, தூய மரபு வழியினர், அப்பழுக்கற்ற சான்றாண்மை பயின்றவர், (பெயரடை) தூய இனமரபு சார்ந்த, அடங்கா வெறியார்வமிக்க, தளரா ஊக்கமுடைய.
Thoroughfare
n. பொதுச் செல்வழி.
Thoroughgoing
a. தளர்விலா ஊக்கமுடைய, சிறிதும் விட்டுக்கொடுக்காத, முழுநிறை கண்டிப்பு வாய்ந்த, முழு விடாப்பிடியான.
Thoroughly
adv. முழுத்தீர்வாக, முற்றமுழுக்க.
Thoroughness
n. முழுநிறை தீர்வு, முழுநிறை திட்ப நுட்பம்.
Thoroughpaced
a. குதிரை வகையில் எவ்வகை நடைக்கும் பயிற்சி பண்ணப்பட்ட, எல்லா வகையிலும் முழுநிறைவான, எல்லா வழியிலும் நிறைதீர்வான, மட்டு மழுப்பல் எதற்கும் இடமில்லாத.
Thorough-pin
n. குதிரைக்கால் குழி வீக்கம்.
Thorpe
n. சிற்றுர், பட்டி, பாக்கம்.
Those
pron அவர்கள், அவை, (பெயரடை) அந்த.