Up
n. மேடு, உயிரிடம், நன்னிலை, நலமேம்பாடு, நேர்மைநிலை, வெற்றிநலம், வாழ்வின் உயர்நிலை, செல்வவளமை, செல்வ வளமையுடையவர், (பே-வ) மேல்நிலை, (பெ.) மேட்டிலுள்ள, மேடு நோக்கிச் செல்கிற, உயரிடஞ் செல்கிற, மேல்நோக்கிச் செலுத்தப்படுகிற, மேல்நோக்கிச் சாய்ந்துள்ள, சாய்ந்துயர்ந்து செல்கிற, பொங்குகிற, ஊர்தி முதலியன வகையில் மைய இடம் நோக்கிய, தலைநகர் நோக்கிய, (வினை.) மேற்செல், மேலே வா, முன்னேறு, மேலே வை, தூக்கு, உயர்த்து, உடனெழு, கிளர்ந்தெழு, உடனடியாகத் தொடங்கு, துணிந்து செயலாற்று, துணிகரமாகத் தலையிடு, உடனடியாகத் தெரிவி, உடனடியாக எடு, உடனடியாகச் செய், நீரோட்டத்திற்கு எதிராகச் செல், அன்னப்புட்கள் வகையில் உடையவர் குறியீடு முன்னிட்டு ஆற்றில் எதிரிட்டுச் செலுத்து, (வினையடை.) மேலே, உயரத்தில், மேல்நோக்கி, மீதாக, உயர்வாக, உயரிடத்தில், உயர்மட்டத்தில், உயர்படியில், உயர்தொகையாக, உயர்விலையில், உயரிடத்திற்கு, உயர்மட்டத்திற்கு, உயர்நிலைக்கு, உயர்படிக்கு, உயர்தொகைக்கு, உயர்விலைக்கு, தலைநகரில், தொலைமேலிடத்தில், மையநோக்கி, தலைநகரை நோக்கி, தொலைமேலிடநோக்கி, முன்னேறி, முன்னேற்ற நிலைக்கு, உள்ளாக, உள்ளிடநோக்கி, வடபால், வடதிசை நோக்கி, நிமிர்ந்து, நிமிர்வாக, எழுந்து, விறைப்பாக, விறுவிறுப்பாக, செயல் முறுக்குடன், எழுச்சியுடன், கிளர்ந்தெழுந்து, எழுச்சிகொண்டு, எதிராகக்கிளர்ச்சியில்முனைந்து, செயலுக்கொருங்கி, ஆயத்தமாக, முனைப்பாக, உக்கிரமாக, தீவிரமாக, உரத்து, செறிவுற்று, திடுமென, முக்கியமாக, செயலுருப்பட, தொலைவாக, எல்லையாக, வரையிலும், அணிமைவரை, குறித்த இடத்துக்கு, அளவில், கைவசமாக, காவலாக, பாதுகாப்பாக, ஆகச்சேர்த்து, முழுவதும், தீர, முற்றுற, முற்றிலும், வேலை முடித்து, விழிப்பாக, நெருக்கமாக, சரிவர, நடைமுறை வகையாக, கோளாறாக, படுக்கையை விட்டு, குதிரை வகையில் முதுகின் மீது, பள்ளி-கல்லுரி வகையில் தங்குமனையில், தேறல் வகையில் சப்பென்று, சட்டமன்ற வகையில் ஒத்திப்போட்டு, (கப்.) காற்றுத் திசையில, மேல், மீதாக, மேலேறி, மீதாக ஏறி, ஊடாக மேலேறி, முன்னேறி, நெடுகிலும் முன்னோக்கி, உள்ளேறி, மேலிடத்துக்கு, உயர் இடத்துக்கு, உயர் பகுதிக்கு, தொலைப் பகுதிக்கு, உட்பகுதிக்கு, மேலேறி உயர் இடத்தில், மேடுநோக்கி, தொலைவாக, தொலைவிடம் நோக்கி, ஊர்தி வகையில் மைய இடநோக்கி, தலைநகர் நோக்கி, ஆறுவகையில் நீரோட்டத்துக்கு எதிராக.