English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Winesap
n. அமெரிக்க ஆப்பிள் வகை.
Wine-stone
n. தேறற்படிவு.
Wine-vault
n. இன்தேறல் அடிநிலக் கிடங்கு.
Wing
n. சிறகு, வௌவாலின் சிறகு, கோழி முதலிய நிலப் பறவைகளின் சிறையுறுப்பு, பூச்சிகளின் இறக்கை, பறக்க உதவும் உறுப்பு, பறத்தல், பறக்கும் நிலை, பறத்தற்கருவி, விரைசெலவு, விரை செலவாற்றல், விசை செலவாற்றற் கருவி, பறவைக்கூட்டம், (பே-வ) புயம், மேற்கை, பக்கம், புடைவாரம், சிறகம், விமான இறக்கை, கட்டடச் சிறகம், கோட்டையின் நீள்சிறைக் கட்டுமானம், படையின் பக்கஅணி, கடற்படையின் புறக்கோடி, விமானப் படைப்பிரிவு, நாடகக் கொட்டகையின் புடைவாரம், அரங்கின் பக்க அறை, பக்கக்காட்சித்திரை, பக்கத்திரைக்காட்சி, ஆட்ட முன்புறச் சிறையணி நாற்காலி முதுகுப்புறப் புடைக்கட்டை, வண்டிச் சக்கரங்களின் மாட்காப்புப்பட்டை, அரசியல் கட்சிப் புடைசாரி, ஆதரவுப் பொறுப்பாட்சி, (வினை.) சிறு இணைத்து அமை, சிறைப்பகதி யமை, பக்கக்கூறுகள் அமை, பறக்கச்செய், பறக்கவிட, பறந்துசெல், பறந்து கட, சிறகுடன் மிக உயரத்தில் பற, பறக்க உதவு, காற்றில் மிதந்து செல்ல உதவு, விமானத்தில் செல், விரைந்து செல், விரைவு கொடு, வேகம் கொடு, விரைவூக்கமளி, சிறகுப்பக்கமாகக் காயப்படுத்து, மேற்கைப் பக்கமாகக் காயப்படுத்து.
Wing-commander
n. விமானச்சிறகத் தலைவர்.
Wingcovert
n. இறகு அடிப்பாயல், பறவைகளின் சிறகடியை மூடியுள்ள மெல்லிறகுப்பாயல்.
Winged
a. சிறகுகள் அமைந்துள்ள, விதை வகையில் சிறகல்லியினையுடைய, தண்டு வகையில் இலைக்காம்படி இணைவுற்ற, கனி வகையில் தட்டையான அடி இணைப்புடைய, சிறகில் அடிபட்ட, விரைவான, விழுமிய.
Wing-footed
a. (செய்.) விரைவான.
Wingless
a. சிறகுகள் இல்லாத.
Winglet
n. சிறு சிறகு, போலிச் சிறகு.
Wingman
n. விமான அணித் துணைக்காவல் விமானம், விமான அணித் துணைக்காவல் விமான வலவர்.
Wings
n. pl. விமானப்படை வலவரின் பொறிப்புச் சின்னம், கப்பலின் பாய்கள்.
Wing-sheath
n. பூச்சியின இறக்கைச் செதிளுறை.
Wing-spread
n. சிறகுப்பரப்பளவு, விமான இறக்கைகளின் பரப்பகல அளவு.
Wing-stroke
n. சிறகடி, பறத்தலில் இறக்கைகளின் ஒரு தடவை இயக்கம்.
Wink
n. இமைப்பு, கண் இமைப்பொழுது, (வினை.) கண் இமை, கண்மூடித்திற, கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி, ஔத வகையில் மினுக்கு மினுக்கென்று ஔதவிடு, விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஔதர்.
Winkle
n. உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை.
Winning
a. வெற்றியை உறுதி செய்கிற, வெற்றி பெறுகிற, வெற்றிச் செயல் சார்ந்த, வெற்றிச் செயலுக்குரிய, கவர்ச்சியான, இனிமையூட்டுகிற, தன் சார்பில் சாய்வூட்டத்தக்க.
Winning-post
n. குதிரைப்பந்தய வௌதயின் பந்தய இலக்கு.