English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Winnings
n. pl. கெலித்த மதிப்பு, கெலிப்பெண் தொகுதி.
Winnow
n. முறம், பொலிசுளகு, (வினை.) புடை, பதர்நீக்கு, தூசு நீக்கு, மாசு நீக்கித் தேர்ந்தெடு, சலித்தெடு, பிரித்தெடு, தௌளு, கொழி, வகைப்படுத்து, ஓரினத்தைப் பொறுக்கியெடு, பயனற்ற பொருள்களைக் களைந்தெறி,(செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு, (செய்.) சிறகடித்துக்கொள், மயிர் உளர், மயிர் கலைவுறச் செய்.
Winsome
a. கவர்ச்சிமிக்க, தோற்ற வனப்புடைய, மகிழ்ச்சியளிக்கிற, தன் வயப்படுத்துகிற.
Winter
n. பனிக்காலம், குளிர்பருவம், மகிழ்ச்சியற்ற பருவம், (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு, (பெ.) குளிர்காலத்திற்கு உரிய, குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற,புயலான, துயரம் நிரம்பிய, (வினை.) பனிக்காலத் கழி,செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு, குளிர் காலத்தைத் தாங்கிக் கழி.
Winter-green
n. பசுமை மாறாச் செடியினம்.
Winterize
v. பனிப்பருவச் சூழலுக்கு இயைவுடையதாக்கு, குளிர்காலத்துக்கு வேண்டிய காப்புக்கலம் குளிர்காப்பு உடைமுதலியன வகுத்துச் சேமி.
Winter-lodge
n. (தாவ.) பனிக்காலத்தில் செடியின் கருமுளையைக் காக்கும் பொதியரும்பு
Winterly
a. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
Winters
n. pl. ஆண்டுகள், வாழ்வின் ஆண்டுகள்.
Winter-tide
n. (பழ.) பனிப்பருவம், குளிர்பருவம்.
Wintery, wintry
குளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய, பனிக்காலப் பண்புக்கூறுடைய, புயலார்ந்த, புயல் நிலையுடைய, குளிர்மிக்க, பெருங்காற்றடிக்கிற, எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய, புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற, வரவேற்றபு வகையில் அன்பில்லாத, அக்கறையற்ற, களியார்வமில்லாத.
Winy
a. இன்தேறலினைப் போன்ற, வெறியூட்டப்பெற்ற, வெறிமயக்கங்கொண்ட.
Wipe
n. துடைப்பு, (இழி.) பலத்த வேகமான அடி, (இழி.) கைக்குட்டை, (வினை.) துடை, தேய்த்துத் துப்புரவு செய், கறைதுடைத்தெடு, கண்ணீர் துடைத்தகற்று, துடைத்தழி, ஒழித்துவிடு, இல்லாதாக்கு, நிலத்தளம் துடைத்துப்பெருக்கு, கலம் தேய்த்து, அலம்பு, (இழி.) பலமாக அடிக்கக் கையோங்கு, (இழி.) பலமாக அடி.
Wire
n. கம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வௌத மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு.
Wire-dancer
n. கம்பிநடன வித்தையாளர்.
Wiredraw
v. உலோகத்தைக் கம்பியாக நீட்டு, உறு நுட்பமாக்கு.
Wire-edge
n. போலிக் கூர்முனை, மட்டுமீறிக் கூராக்கப் படுவதனால் பின் மடிவுறும் போல விளிம்பு.
Wire-gun
n. கம்பித்தகடு வரிந்து சுற்றிய துப்பாக்கி.
Wire-haired
a. கம்பி போன்ற மயிருடைய, நாய் வகையில் விறைப்பான மயிருடைய.