English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
clearcole
n. வண்ணந்தீற்றுவதற்கு முன்னீடான முதற்பசை வெள்ளடிப்பு.
clearing
n. அடைசல் அகற்றல், தடைநீக்கம், இடஒழிப்பு, காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல், காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம், பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
Clearing-House
n. காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம், இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
clearing-nut
n. தேற்றாங்கொட்டை.
clearly
adv. தௌிவாக, வெளிப்படையாக, எளிதாக, தடையின்றி, ஐயத்துக்கிடமில்லாமல்.
clearness
n. தௌிவு, மங்கலின்மை, மறைப்பின்மை, ஒளி ஊடுருவும் தன்மை, பளிங்கு இயல்பு, மனத்தௌிவு, அறிவுத் தௌிவு.
clearwing
n. பளிங்கு போன்ற சிறகுடைய விட்டில் வகை.
cleat
n. கப்பல் பாய்மரத்தில் உள்ள ஆப்பு, முளை.
cleavage
n. பிளத்தல், பிளவு, வேறுபாடு, மனவேறுபாடு, பிரிவினை.
cleave
-1 v. பிரி, பிள, பிளவுறு, வல்லந்தமாகப் பிரி, சிழித்துச்செல், ஊடுருவு, துளை, வெட்டு, துண்டுபடுத்து.
cleaver
n. இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி, பிளப்பவர், பிளப்பது, பிரிப்பவர், பிரிப்பது.
cleavers
n. ஒட்டிப்புல், துணியில் ஒட்டிக்கொள்ளும் கொடிவகை.
cleche
a. (கட்.) முழுதும் உட்குடைந்து ஒடுங்கிய வரம்புடையதாயமைந்த.
cleek
n. இரும்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்டத் தடி.
clef
n. இசையொலியின் அதிர்வெல்லையைக் குறிக்கும் மூன்று அடையாளங்களுள் ஒன்று.
cleft
-1 n. பிளவு, வெடிப்பு.
cleft(2), v. cleave
-1 என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று, முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
cleg
n. உண்ணி வகை, குதிரை ஈ.
cleistogamic
a. (தாவ.) திறவாத் தற்கருப் பொலிவுடைய, நிலையாக மூடியபடியேயிருந்து தானே கருப்பொலிவுறும் இயல்புகொண்ட.
cleistogamy
n. திறவாமலே தற்கருப்பொலிவுறுதல்.