English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cleithral
a. முழுதும் மோடு இட்ட, முற்றிலும் கூரை கவிந்த.
clem
v. பட்டினிபோடு, பட்டினிகிட.
clematis
n. தழுவியேறும் கொடிவகை.
clemency
n. அருளிரக்கம், தயவு, எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை, மட்டியல்பு, மென்னயப்பு.
clement
a. அருளிரக்கமுடைய, இன்னமைதியுடைய.
clench
n. விடாப்பிடி, இறுகுபிடி, தீர்முடிவு, முடிவுத் தீர்வு, (வி.) கைவிரல்களை இறுக்கமூடு, பற்களை அழுத்திமூடு, இறுகப்பற்று, இறுக்கிப்பிடி, ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு, வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு, வலியுறுத்தி முடிவுசெய், (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Cleopatras needle
n. லண்டனிலுள்ள தேம்ஸ் ஆற்றோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எகிப்திய தூபி.
clepsydra
n. பழங்கால நீர்வட்டில் நாழிகைப் பொறி.
clerestory
n. திருக்கோயில் சாய்விறக்கிற்கு மேலுள்ள பலகணி வரிசையுடைய மதிற்பகுதி.
clergy
n. திருச்சபைக் குருமார் தொகுதி, சமய குருமார் மரபு.
clergyman
n. திருச்சபைச் சமயகுரு, நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
clergywoman
n. திருச்சபைப் பெண்குரு.
cleric
n. திருச்சபைக்குரு, (பெ.) திருச்சபைக் குருமரபுக்குரிய, எழுத்தாயருக்குரிய.
clerical
n. அரசியல் மன்றக் கட்சி வகையினர், (பெ.) திருச்சபைக் குருமரபைச் சார்ந்த, எழுத்தாயரைச் சார்ந்த.
clericals
n. pl. திருச்சபைக் குருமரபினர் உடை.
clericate
n. திருச்சபைச் சமயகுருவின் பதவி.
clericity
n. திருச்சபைச் சமயகுருவின் நிலை.
clerish
a. எழுத்தாயரின் இயல்புடைய, எழுத்தாளர் போன்ற.
clerisy
n. சுற்றோர் குழு.
clerithew
n. நகைச்சுவையுள்ள துணுக்குப்பாட்டு.