English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								clientele
								n. தொடர்சுற்றம், பரிவாரம், வாடிக்கைக்குழு, சார்பாளர் தொகுதி, பின்பற்றுபவர் குழாம்.
								
							 
								cliff
								n. கொடும்பாறை, செங்குத்தான பாறை, மலையின் செங்குத்தான பகுதி, கடல் நோக்கும் செங்குத்தான பாறை.
								
							 
								cliff-hanger
								n. சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை, திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம், வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம், உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி.
								
							 
								cliffsman
								n. மலையேறி, பாறைகளில் ஏறுவதில் திறமையுடையவர்.
								
							 
								clifted, clifty
								 கொடும் பாறைகளாகப் பிளவுற்ற.
								
							 
								climacteric
								n. வாழ்க்கையின் முக்கிய திருப்புக் கட்டம், உடல்மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடிக்கண்டம், (பெ.) நெருக்கடி நிலைமையான 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் நிகழ்கிற.
								
							 
								climactic, climactical
								a. உணர்ச்சி ஏற்றமுடைய, உணர்ச்சி முகடுசார்ந்த.
								
							 
								climatal, climatic, climatical
								 தட்பவெட்பநிலை சார்ந்த, சூழமைதிக்குரிய.
								
							 
								climate
								n. தட்பவெட்பநிலை, காலப்போக்கு, சமுதாயச் சூழ்நிலை அமைதி, காலச் சூழ்நிலை அமைதி, பண்பமைதி.
								
							 
								climatography
								n. தட்பவெட்ப நிலைகளின் விரிவு விளக்கம்.
								
							 
								climatology
								n. தட்பவெப்ப நிலைநுல், தட்பவெப்பநிலையின் காரணகாரியத் தொடர்புபற்றிய ஆராய்ச்சித்துறை.
								
							 
								climax
								n. ஏறணி, உணர்ச்சி ஏற்றம், நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம், உணர்ச்சி முகடு, (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல், உச்சிக்குக் கொண்டுசெல், படிப்படியாக உயர்ந்துசெல்.
								
							 
								climb
								n. ஏற்றம், ஏறுதல், ஏறும் முயற்சி, ஏறவேண்டிய இடம், (வி.) ஏறு, தவழ்ந்தேறு, தாவியேறு, மீதேறு, மேற்செல், உயர்ந்துசெல்.
								
							 
								climb on jthe bandwagon
								 வெற்றி பெறும் கட்சி பக்கமாக நிற்க முயற்சிகொள்.
								
							 
								climber
								n. ஏறுபவர், ஏறிச்செல்பவர், சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர், ஏறிச்செல்வது, தழுவு கொடி, ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
								
							 
								climbing-iron
								n. மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு.
								
							 
								clime
								n. (செய்.) நாடு, தேசம், பல்வேறு தட்பவெப்ப நிலையுடைய நிலப்பரப்பு.
								
							 
								clinamen
								n. சாய்வு, மனக்கோட்டம், மனச்சார்பு, இயற்கை விருப்பப்போக்கு.
								
							 
								clinch
								n. விடாப்பிடி, தீர்முடிவு, முடிவுத்தீர்வு, (வி.) ஆணியை அடித்து மல்க்கி இறுக்கு, வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு, வலியுறுத்தி முடிவுசெய், (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டிறுக்கு, குத்துச்சண்டையில் கை ஓங்க முடியாத அளவில் நெருங்கிப்பிடி.
								
							 
								clincher
								n. பற்றிப்பிடிப்பவர், வலியுறுத்துபவர், வலியுறுத்தும் முடிவு, தீர்முடிவு.