English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
woundless
a. ஊறுபடாத, காயமுறாத.
woundwort
n. புண் ஆற்றும் இயல்புடையதென்று கருதப்படுஞ் செடிவகை.
wove
v. 'வீவ்' என்பதன் இறந்த கால வடிவம்.
wove-paper
n. கம்பி வலைச் சல்லடை அடையாளங்கொண்டுள்ள தாள்.
woven
v. 'வீவ்' என்பதன் முடிவெச்ச வடிவம்.
wowser
n. சமயத்துறைக் கடுங்கண்டிப்பு வெறியர்.
wrack
n. உரமாகப் பயன்படும் கடற்பாசி, கப்பல் அழிவில் எஞ்சிய பொருள்கள், அழிபாடு, அழிவு.
wraith
n. ஆவியிரட்டை, ஒருவர் சாவதற்குச் சிறிது முன்போ பின்போ காணப்படும ஆவியுரு.
wrangle
n. பூசல், சச்சரவு, உரத்து வாதாடல், நாகரிகமற்ற வாய்ச்சண்டை, (வினை.) பூசலிடு, உரத்து வாதாடு.
wrangler
n. கடும்பூசலர், வாய்ச்சண்டையர், ஏரான், கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகம் வகையில் சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
wrap
v. பொதி, சுற்றிப் போர்த்து, உறையிடு, சுற்றி இழுத்து மூடு, பாதி மேற்சென்று கவிந்திரு.
wrappage
n. போர்த்தல், போர்வை, பொதிபொருள்.
wrapped
a. போர்த்தப்பட்ட, பொதியப்பட்ட, முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த.
wrapper
n. சுற்றிப் போர்த்துபவர், சுற்றிப்போர்த்துவது, மூடு சிலை, மேலங்கி, மேலங்கி போன்ற ஆடை, சிப்பப் பொதி தாள், சுவடியின் மேற்பொதி அட்டை, சுருட்டுக்குச் சுற்றும் உயர்தரப்புகையிலை வரித்தாள்.
wraps
n. pl. போர்வை, முரட்டுக்கம்பள விரிப்புகள்,தளர்மேலுடுப்புகள், கழுத்து வரிக் குட்டைகள், தணிக்கையாளர் சிறப்புப் பொதியுறை.
wrasse
n. பேலெலும்பு மீன் வகை.
wrath
n. வெகுளி, சீற்றம், உளக்கொதிப்பு.
wrathful
a. சீற்றங் கொண்டுள்ள.
wreak
v. பழிவாங்கு, கட்டற்று வெளிவிடு.