Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொற்றவஞ்சி | koṟṟa-vaci, n. ஈid. +. (Puṟap.) Theme extolling a king who destroyed his foes with his sword; பகைவரை வாளோச்சி அழித்த அரசனது புகழைப் பெருகவுரைக்கும் புறத்துறை. (பு. வெ. 3, 7.) |
| கொற்றவள்ளை | koṟṟa-vaḷḷai, n. <>id. +. 1. (Puṟap.) Theme indirectly describing the prowess of a king by regretting that the enemy's country will be destroyed; பகைவர் தேசம் கெடுவதற்கு வருந்துவதைக் கூறுமுகத்தான் அரசன் கீர்த்தியைச் சொல்லும் புறத்துறை. (பு. வெ. 3, 8.) 2. Devastation of a hostile kingdom; 3. Tribute paid by a defeated king; |
| கொற்றவன் 1 | koṟṟavaṉ, n. <>id. [M. koṟṟavan.] 1. King, monarch; அரசன். குடையினீழற் கொற்றவன் (சீவக. 2544). 2. Victor; |
| கொற்றவன் 2 | koṟṟavaṉ, n. cf. கொற்றான். Balloon-vine. See முடக்கொற்றான். (மலை.) |
| கொற்றவாயில் | koṟṟa-vāyil, n. <>கொற்றம் +. Portico at the entrance of a palace or temple. See ஆசாரவாசல். கொடிக்கோசம்பிக் கொற்றவாயில் (பெருங். மகத. 27, 194). |
| கொற்றவி | koṟṟavi, n. <>id. Queen; அரசி. கொற்றவி மகனை நோக்கிக் கூறினள் (சீவக. 2609). |
| கொற்றவுழிஞை | koṟṟa-v-uḻiai, n. <>id. Theme describing the march of a king with his army to capture the enemy's city; பகைவர்பதியைக் கைக்கொள்ளுதற்பொருட்டு அரசன் படையெடுத்துச் செல்லுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 5.) |
| கொற்றவை | koṟṟavai, n. <>id. Durga, as the Goddess of Victory; [வெற்றிக்கு உரியவள்] துர்க்கை. முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சி (பெருங். இலாவாண. 2, 31). |
| கொற்றவைநிலை | koṟṟavai-nilai, n. <>கொற்றவை+. (Puṟap.) Theme of offering sacrifice to Durga and worshipping Her; துர்க்கைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை. (தொல். பொ. 59.) |
| கொற்றன் | koṟṟaṉ, n. <>கொற்று1. Mason, bricklayer; கொத்தன். (நன். 130, மயிலை.) |
| கொற்றாள் | koṟṟāḷ, n. <>id. + ஆள். Labourer working in earth, stone, etc.; mason; கல்மண்களில் வேலைசெய்பவ-ன்-ள். என்போலத் திருந்து கொற்றாள் கிடையாது (திருவாலவா. 30, 11). |
| கொற்றான் | koṟṟāṉ, n. Parasitic leafless plant, s.cl., Cassytha filiformis; இலையற்ற கொடிவகை. (M. M. 230.) |
| கொற்றி 1 | koṟṟi, n. <>கொற்றம். [M. koṟṟi.] 1. See கொற்றவை. பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலித். 89). . 2. [T. koṭṭamu.] A masquerade dance; |
| கொற்றி 2 | koṟṟi, n. Young calf; பசுவின் இளங்கன்று. (பிங்.) |
| கொற்றிக்கோரை | koṟṟi-k-kōrai, n. perh. கொற்றி2 +. A kind of sedge, Cyperus; கோரை வகை. |
| கொற்றியார் | koṟṟiyār, n. <>கொற்றி1. 1. A sect of Vaiṣṇava female mendicants wearing basil garlands and other religious marks; துளசிமாலை முதலிய சின்னங்களை யணிந்து திருமாலடியராய்த் திரியும் பெண் துறவிகள். 2. One of the constituent themes of kalampakam; 3. Goddess of Parturition; |
| கொற்றியாரைவழிவிடு - தல் | koṟṟiyārai-vaḻi-viṭu-, v. intr <>கொற்றியார் +. To bid farewell to the goddess of parturition on the fifth day after childbirth, by sending away the midwife to some open place or jungle with the mat used by the mother and morsel of each of the dishes she had tasted; பிரசவித்த ஐந்தாம்நாள் பிள்ளைப்பேற்றின் அதிதேவதையை வழியனுப்பும் பாவனையாகப் பிரஸவஸ்திரீ படுத்திருந்த பாயுடன் அவள் கொண்ட உணவின் ஒவ்வொருவகையிலும் சிறிது எடுத்துக்கொள்ளச் சொல்லி மருத்துவச்சியை ஊருக்குப் புறத்தே போகச் செய்தல். (J.) |
| கொற்றிலக்கை | koṟṟilakkai, n. <>கொற்று1+இலக்கை. An ancient tax; ஒரு பழைய வரி. (Insc.) |
| கொற்று 1 | koṟṟu, n. prob. கொல்-. 1. Masonry, brickwork; கொற்றுவேலை. கொற்றுள விவரில் (திருவாலவா. 30, 23). 2. Mason, bricklayer; 3. The measure of work turned out by a mason; |
| கொற்று 2 | koṟṟu, n. perh. கொள்-. [M. koṟṟu.] Food, means of subsistence; உணவு. (I. M. P. S. A. 109.) |
| கொற்றுறை | koṟṟuṟai, n. <>கொல்2 + துறை. Blacksmith's workshop, smithy; கொல்லன் பட்டடை. கொற்றுறைக் குற்றில (புறநா. 95). |
