Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொறகொறெனல் | koṟa-koṟeṉal, n. Onom. expr. of rattling in the throat; தொண்டையின் கரகரப்புக் குறிப்பு. |
| கொறடா | koṟaṭā, n. <>Port. corda [T. koradā, K. koṟadē, M. koṟaṭā, Tu. korde.] Horsewhip, whip, scourge; குதிரைச்சவுக்கு. |
| கொறி - த்தல் | koṟi-, 11. v. tr. cf. kṣur [ T. koruku, K. koṟuku, M. koṟi.] 1. To nip off the husks of grains; to nibble grain; பல்லாலும் அலகாலும் தானியத்தைப் பிரித்துத் தின்னுதல். தினைகள் கொறிப்ப முன்றூவி (காஞ்சிப்பு. இருபத். 95). 2. To graze; to pick up food here and there, as cattle; to eat scantily; 3. To make a ticking or clucking sound; to chirp, as a lizard; 4. To chatter; |
| கொறி | koṟi, n. perh. கொறி-. [T. goṟṟe, K. Tu. kuṟi, M. koṟi.] 1. Sheep; ஆடு. கொறியினவுணர்தம் வெள்ளங்கள் . . . கொன்றதிலோ (அஷ்டப். திருவாங். மா. 32). 2. Aries, a constellation of the zodiac; |
| கொறித்துப்பார் - த்தல் | koṟittu-p-pār-, v. tr. <>id. +. (W.) 1. To ascertain by tasting whether the paddy-grain that has been boiled is dry enough for husking; குத்துதற்குத் தக்கபடி காய்த்ந்துள்ளதா என்பதை அறியப் புழுங்கல் நெல்லை வாயிலிட்டுப் பதம்பார்த்தல். 2. To stare at with impudence; |
| கொறிதலை | koṟitalai, n. Creat. See நிலவேம்பு. (மலை.) |
| கொறு | koṟu, n. cf. கொரி. Wicker-muzzle of a calf; கன்றின் வாய்ப்பூட்டு. (W.) |
| கொறுக்கச்சி | koṟukkacci, n. See கொறுக்கை1. 1. (குறிஞ்சிப். 68, உரை.) . |
| கொறுக்கல் | koṟukkal, n. See கொறுக்கை2. Loc. . |
| கொறுக்கா | koṟukkā, n. See கொறுக்காய்ப் புளி. (மலை.) . |
| கொறுக்காய் | koṟukkāy, n. See கொறுக்காய்ப்புளி. (W.) . |
| கொறுக்காய்ப்புளி | koṟukkāy-p-puḷi, n. prob. கொடுக்காய்+. (L.) 1. Manilla tamarind, m. tr., Pithecolobium dulce; கொடுக்காய்ப்புளி. 2. Malabar gamboge, l.tr., Garcinia cambogia; |
| கொறுக்கு | koṟukku, n. [T. koṟuku.] Syphilis, chancre; இலிங்கவிரணம். Loc. |
| கொறுக்குவலி | koṟukku-vali, n. <>குரங்கு+. A kind of disease. See குரக்குவலி. (w.) |
| கொறுக்கை 1 | koṟukkai, n. 1. European bamboo reed, 1. sh., Arundo donax; நாணல் வகை. (மலை.) 2. Stargazers, sea-fish, Uranoscopidoe; 3. See கொறுக்கு. (M. L.) |
| கொறுக்கை 2 | koṟukkai, n. <>கொறு (onom.) [T. guṟaka.] Snoring; குறட்டைமூச்சு. (பிங்.) |
| கொறுக்கோல் | koṟu-k-kōl, n. See கொறு. முன்னணைக் கன்று பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்குக் கொறுக்கோலென்று அதின் மூஞ்சியிலே கட்டிவிடுவர்கள் (ஈடு, 4, 8, 4). . |
| கொறுகொறு - த்தல் | koṟu-koṟu-, 11. v. intr. [T. koṟakoṟalādu.] To bubble with anger; கோபங்காட்டுதல். இட்டிடை கோறுநாங்க ளெனக் கொறுகொறுப்ப (சீவக. 2040). |
| கொறுகொறுவெனல் | koṟu-koṟu-v-eṉal, n. Onom. expr. signifying (a) roaring, as the sea; rattling, as the throat; ஓர் ஒலிக்குறிப்பு. பாற்கடல் கொறுகொறுவென்ன (தணிகைப்பு. நாகமருள். 3): (b)anger; |
| கொறுடு | koṟuṭu, n. prob. கொடிறு. Cheek; கன்னம். (ஈடு, 8, 3, 4.) |
| கொன் | koṉ, n. 1. Uselessness, futility; பயனின்மை. (தொல். சொல். 256.) 2. Fear; 3. Season, time; 4. Dawn; 5. Greatness, vastness; 6. Power, strength; |
| கொன்றை | koṉṟai, n. 1. Indian laburnum; சரக்கொன்றை. பொலனணி கொன்றையும் (ஐங்குறு. 435). 2. Red Indian laburnum. See 3. Siamese tree. See |
| கொன்றைசூடி | koṉṟai-cūṭi, n. <>கொன்றை+. šiva, as crowned with koṉṟai flowers; [கொன்றைமாலை சூடியவன்] சிவன். (திவா.) |
| கொன்றைப்பழக்குழல் | koṉṟai-p-paḻa-k-kuḻal, n. <>id. + Musical pipe made of the koṉṟai pod; கொன்றைப்பழத்தைத் துளைத்துச் செய்யப்பட்ட ஊதுகுழல். கொன்றைப்பழக்குழற் கோவலர் (சிலப். 17, பாட்டு, உரை). |
| கொன்றைவேய்ந்தன் | koṉṟai-vēyntaṉ, n. <>id. +. A short moral code in Tamil by Auvaiyār, commencing with koṉṟaivēynta; ஒவ்வையார் இயற்றிய 'கொன்றைவேந்த' என்று தொடங்கும் ஒரு நீதிநூல். |
